என் மலர்
நீங்கள் தேடியது "External Affairs Minister Jaishankar"
- சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்:
தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் இருக்கிறது.
அரசு உயர் பதவியிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர்-புனிதா தம்பதியின் மகன் சந்துரு (வயது42) என்பவர் தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர் தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ெஹ.ச்.டி. படிப்பை முடித்துள்ளார்.
2009 யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துரு 2-வது முயற்சியிலேயே அவருக்கு ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது.
பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதராக அலுவலகத்திலும், பின்னர் 2020-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியுமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.
- காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
- கருத்து சுதந்திரம் வன்முறையை தூண்டும் வகையில் இருக்க கூடாது.
வாஷிங்டன்:
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நம் நாடு ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கருத்து சுதந்திரம் வன்முறையை தூண்டும் வகையில் இருக்க கூடாது. அது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும். அது சுதந்திரத்தை பாதுகாப்பது அல்ல.
கனடா விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் விவாதித்தோம். நாங்கள் இதைப்பற்றி விவாதித்தோம் என்பதை சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் மற்ற விஷயங்கள் குறித்தும் விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்திரியாவுக்கு தேவையான பணியாளர்களை வரவழைத்துக் கொள்ளவும், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்தோ-பசிபிக், ஜி20 மாநாடு ஆகியவை பற்றியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
ஸ்டாக்ஹோம்:
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் ஐரோப்பிய கூட்டமைப்பு-இந்தோ பசிபிக் மந்திரிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை மாநாட்டுக்கு இடையே ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். லாட்வியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம், ருமேனியா, சைப்ரஸ், பல்கேரியா, லிதுவேனியா ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
லாட்வியா வெளியுறவுத்துறை மந்திரி எட்கர்ஸ் ரிங்கெவிக்சுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி பேசினார். உக்ரைன் போரின் விளைவுகள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
அரசியல் ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும், உணவு பாதுகாப்பு குறித்தும் பேசினர். ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க்கை ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, ஆஸ்திரியாவுக்கு தேவையான பணியாளர்களை வரவழைத்துக்கொள்ளவும், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருவரும் உக்ரைன் போர் பற்றியும், இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்தும் ஆலோசித்தனர். பிரான்ஸ் வெளியுறவு மந்திரி கேத்தரின் கொலன்னாவை ஜெய்சங்கர் சந்தித்தபோது, பிரதமர் மோடி ஜூலை மாதம் பாரீ்ஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது பற்றி விவாதித்தனர். அந்த பயணத்தை வெற்றிகரமாக ஆக்குவது பற்றி பேசினர்.
மேலும், இந்தோ-பசிபிக், ஜி20 மாநாடு ஆகியவை பற்றியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். லிதுவேனியா, பெல்ஜியம் லிதுவேனியா நாட்டு வெளியுறவு மந்திரி கேப்ரியலியஸ் லேண்ட்ஸ்பெர்கிசுடனான சந்திப்பின்போது, இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேசப்பட்டது. உலக நிகழ்வுகள் குறித்த ஐரோப்பாவின் பார்வை பற்றியும் விவாதிக்கப்பட்டது. பெல்ஜியம் வெளியுறவு மந்திரி ஹட்ஜா லபிப்பை ஜெய்சங்கர் சந்தித்தபோது, இருதரப்பு உறவை மேலும் முன்னெடுத்து செல்வது பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உறுதி எடுத்துக்கொண்டனர்.
அடிக்கடி சந்திக்க சம்மதம் தெரிவித்தனர். பல்கேரியா வெளியுறவு மந்திரி இவான் கொண்டோவுடனான சந்திப்பின்போது, இருதரப்பு உறவு குறித்து பேசப்பட்டது. மாணவர்கள் மீட்புக்கு உதவி ருமேனியா வெளியுறவு மந்திரி போக்டன் அவுரெஸ்குவை ஜெய்சங்கர் சந்தித்தபோது, கடந்த ஆண்டு உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதில் ருமேனிய அரசு அளித்த உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு குறித்தும் பேசினர். சைப்ரஸ் வெளியுறவு மந்திரி கான்ஸ்டன்டினோஸ் காம்போசை சந்தித்த ஜெய்சங்கர், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான தேவை குறித்து ஆலோசித்தார்.
- பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
- இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தில் எந்த மாற்றமுமில்லை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும்.
புதுடெல்லி:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
இன்று காலையில் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று மாலை அண்ணாமலை சந்தித்தார். உடன் மத்திய மந்திரி எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
அப்போது, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
- இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
- தினமும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்புகிறது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. தினமும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்புகிறது. மும்பையில் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருந்தனர்' என்றார்.
காஷ்மீரில் கடந்த 1-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மறுநாள் நடந்த குண்டுவெடிப்பில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.