என் மலர்
நீங்கள் தேடியது "Fan Death"
- சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா.
- நடிகர் ஜெயம் ரவி, ராஜா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா(30). இவர் சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, நம் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

தனது ரசிகரின் திடீர் மரணத்தை அறிந்த நடிகர் ஜெயம் ரவி, ரசிகரின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவரது குடும்பத்திற்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் தான் செய்து தருவதாக நடிகர் ஜெயம் ரவி உறுதியளித்து உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.