search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Federation"

    • வணிகர் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
    • கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் விருதுநகர் மேற்கு மாவட்ட கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மே 5-ந் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. ராஜபாளையம்-சத்திரப்பட்டி ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களை விரைந்து சேர்க்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். இடைத்தேர்தல் ஆதரவு குறித்து ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் போர்க்கொடி தூக்குவதை ஏற்க முடியாது. புகையிலையை உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்க முடியாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வணிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு இந்த முடிவை அறிவிக்கும் வரை வணிகர்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

    புகையிலை விற்பனை தொடர்பாக வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர் வணிகர் சங்க நிர்வாகிகள் பச்சி வன்னியராஜ், கோமதி சங்கர் குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக , கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக , கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டங்களின் அனைத்து ஊராட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். 1994-ல் உருவாக்கப்பட்ட இச் சட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே நடை முறைப்படுத்த ப்பட்டுள்ளது. எனவே முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், கேரள மாநிலத்தை போல தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டரை ஊராட்சி தலைவர்களே முடிவு செய்ய வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி வலியுறுத்தப்பட்டது.

    இதில் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு சார்பாக பஞ்சாயத்து தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், தெற்கு கடையம் ராமலட்சுமி ராமதுரை, ஏ.பி.நாடானூர் அழகுதுரை , வெங்கடாம்பட்டி சாருகலாரவி, தர்மபுரமடம் ஜன்னத் சதாம், மடத்தூர் முத்தமிழ் ரஞ்சித், சிவசைலம் மலர் மதி சங்கர பாண்டியன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி,மந்தியூர் கல்யாணசுந்தரம், நல்லூர் ஊராட்சி சிம்சன்,கருவந்தா தானியேல், கீழ வீராணம் வீரபாண்டியன், மேலப்பாவூர் சொள்ளமுத்து மருதையா, கீழக்கலங்கல் சந்திரசேகர்,ஆயிரப்பேரி சுடலையாண்டி, மத்தளம்பாறை மைதிலி மகேஷ், சில்லரைப்புரவு குமார், பாட்டப் பத்து மாலதி பொன்னுச்சாமி, காசி மேஜர்புரம் குத்தாலம் இசக்கி பாண்டியன், வல்லம் மைதீன் பாத்திமா, சுமை தீர்ந்தபுரம் அருணாசலம், பிரானூர் ஆவுடையம்மாள் ராஜா, பெரிய பிள்ளை வலசை பொறியாளர் வேலுச்சாமி, கணக்கப்பிள்ளை வலசை ஈஸ்வரி, குத்துக்கல்வலசை ஊராட்சி சத்யராஜ், பாட்டாக் குறிச்சி அன்னலட்சுமி, திருச்சிற்றம்பலம் சந்திரா, உள்பட தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார்.

    தென்காசி:

    இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினுடைய சட்டச் செயலாளர் பிச்சைக்கனி மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக துணை பொது செயலாளர் முருகையா ஆகியோர் கூட்டுதலைமை தாங்கி நடத்தினர்.

    இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார்.

    செந்தூர்பாண்டியன், முதுகலை ஆசிரியர்கள் சதீஷ்குமார், காளிராஜ், முப்புடாதி சங்கர், ஜேனட்பொற் செல்வி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

    ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மணிமேகலை சிறப்புரை ஆற்றி பேட்டி அளித்தார். முடிவில் கீதா கோமதி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரமேஷ், ராஜ்குமார்,சுதர்சன்,சிவகுமார்,துரைராஜ்,பசுபதி, தென்காசி ராஜ்குமார், மாதாப்பட்டணம் குத்தாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

    ×