search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fefsi"

    • தனுஷ் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி நிர்வாகத்தின் பத்திரிக்கை செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
    • ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது

    நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி உள்ளதாக ஃபெப்சி செய்தி வெளியிட்டுள்ளதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழ்த் திரைப்பட உலகில் ஒட்டுமொத்த மறு சீரமைப்பை கருத்தில் கொண்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையே நடந்த பலகட்ட பேச்சு வார்த்தைகளில், ஃபெட்சி உட்பட அனைத்து தமிழ் திரையுலக தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு. தென்னிந்திய நடிகர் சங்கம், ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளை, உடனடியாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் வழங்கியது.

    நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் அவர்கள் விஷயத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு தனுஷ் அவர்களின் படப்பிடிப்பு தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே தனுஷ் அவர்கள் தொடர்பாக எந்தவித விவாதமும் இல்லாத நிலையில் நேற்று (17.09.2024) திடீரென தனுஷ் அவர்கள் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.

    ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது.

    ஏனெனில் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுந்தால், அதை பரஸ்பரம் பேசித் தீர்வு காணும் அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்கள் இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை உறுதிப்பட நினைவுபடுத்துகிறோம்.

    மேலும் ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். அதற்கு உதாரணமாக, தமிழ்த் திரையுலகின் தொழிலாளிகளுக்கு மிகக் கடுமையான இன்னல்கள் ஏற்படும் எல்லா சூழல்களிலும், அனைவருக்கும் முன்பாக தென்னிந்திய நடிகர் சங்கமே நலத்திட்டங்களையும் முன்னெடுத்து, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது என்பதை, கொரோனா உள்ளிட்ட காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்த அளப்பரிய உதவிகள் பறைசாற்றும். அதை ஃபெப்சி நிர்வாகமும் மறுக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

    ஆகவே உழைக்கும் தொழிலாளிகளை பின்புலமாக நிறுத்தி, ஃபெப்சி நிர்வாகம் தங்களை அதிகார மையமாக சித்தரித்துக் கொண்டு, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிடுவதைத் தவிர்த்து, அந்த கவனத்தை தங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் நலனில் செலுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை திரைத் தொழிலாளர்கள் மீது உள்ள உண்மையான அக்கறையால் அறிவுறுத்துகிறோம்.

    அத்துடன், திரைத்துறையில் பலகாலமாக நிலவும் பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்க முற்படும் ஃபெப்சி நிர்வாகத்தின் இத்தகைய வரம்பு கடந்த செயல்பாடுகளையும் வீண் சர்ச்சை ஏற்படுத்தும் அறிக்கைகளையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கண் கண்டிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது" என்று தெரிவிதிக்கப்ட்டுள்ளது.

    இன்று நடைபெற்ற பெப்சி தலைவருக்கான தேர்தலில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். #RKSelvamani #FefsiElection
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிக்கு மட்டும் இன்று காலை (பிப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடந்தது. துணைத்தலைவர்கள் 5 பேர், இணைச்செயலாளர்கள் 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்கள் 10 பேரும் செல்வமணி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் 65 பேரும் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்கே.செல்வமணி 49 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிகே.மூர்த்தி 16 வாக்குகள் பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சண்முகம் 50 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரீம் சுந்தர் 15 வாக்குகள் பெற்றார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுவாமிநாதன் 47 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்திரன் 18 வாக்குகளை பெற்றார். 

    இந்தத் தேர்தலில் அனைத்து பதவிகளையும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் அணியினரே கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அணியினர் 2019-2021-ம் ஆண்டு வரையிலும் பெப்சி நிர்வாகத்தைக் கவனிப்பார்கள்.
    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI
    திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    ‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.



    அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.



    கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.

    குஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.

    தவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI 

    பையனூரில் அரசு ஒதுக்கிய நிலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார். #FEFSI #RKSelvamani
    திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    திரைப்பட தொழிலாளர்களுக்கு (பெப்சி) சென்னையை அடுத்த பையனூரில் அரசு 65 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் 15 ஏக்கரில் புதிதாக ஸ்டூடியோ கட்டப்பட்டு உள்ளது. ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது கட்டப்பட்டு இருக்கிறது. ஒரே நேரத்தில் 6 படங்களின் படப்பிடிப்புகளை இங்கே நடத்த முடியும்.

    இந்த ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த ஸ்டூடியோவை ஜூலை மாதம் திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.



    அங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 6 ஏக்கரில் 640 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.

    தயாரிப்பாளர்கள் சங்கத்தை, பெப்சியில் அடகு வைத்துவிட்டது போல பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சிக்கும் நல்லுறவு நிலவுகிறது. இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். #FEFSI #RKSelvamani

    ×