search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fenugreek Recipes"

    வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள்:

    வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
    தக்காளி - ஒன்று
    புளி - நெல்லிக்காய் அளவு
    மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    காய்ந்த மிளகாய் - 3
    மஞ்சள்தூள், பெருங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

    பூண்டை நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.

    வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.

    ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும். ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெந்தயக்கீரை ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×