search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fiat"

    இந்தியாவில் புதிய என்ட்ரி-லெவல் எஸ்யுவி மாடலை வெளியிட இருப்பதாக ஜீப் இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நான்கு மீட்டர் அளவு கொண்ட புதிய எஸ்யுவி மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜீப் இந்தியா தெரிவித்துள்ளது. புதிய எல்யுவி அந்நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.

    புதிய என்ட்ரி-லெவல் ஜீப் எஸ்யுவி அடுத்த தலைமுறை ஃபியாட் பான்டா மற்றும் 500 பிளாட்ஃபார்ம் கொண்டிருக்கும். ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் பிளாட்ஃபார்மின் படி, பான்டா 4X4 மாடலை தழுவி பாடி மற்றும் உள்புறத்தை ஜீப் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய எஸ்யுவி ஜீப் வழக்கமான வடிவமைப்புகளுடன் ஆஃப்-ரோடிங் திறன்களை கொண்டிருக்கும். சர்வதேச சந்தையில் 2022-ம் ஆண்டிற்குள் ஜீப் நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் மற்றும் பத்து பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இத்துடன் 2022-ம் ஆண்டு ராங்களர் பிக்-அப் மற்றும் கிரான்ட் வேகனீர் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.



    இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான எஸ்யுவி மாடல்கள் அளவில் நான்கு மீட்டருக்கும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் விற்பனையை அதிகரிக்க புதிய என்ட்ரி-லெவல் எஸ்யுவி மாடலை பயன்படுத்திக் கொள்ள ஜீப் திட்டமிட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யுவி மட்டுமின்றி மூன்று அடுக்குகள் கொண்ட மிட்-சைஸ் யூடிலிட்டி வாகனத்தை அறிமுகம் செய்யவும் ஜீப் திட்டமிட்டிருக்கிறது.

    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனமும் இந்தியாவை உறுதியான ஏற்றுமதி களமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜீப் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக் மேன்லி கூறும் போது, மகாராஷ்ட்ராவில் உள்ள ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவன தயாரிப்பு ஆலையின் தயாரிப்பு திறனை அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    தற்சமயம் இந்த ஆலையில் 1,60,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 2,40,000 யூனிட்களை தயாரிக்க ஜீப் திட்டமிடுகிறது. இத்துடன் நாட்டில் தற்சமயம் உள்ள ஜீப் விற்பனையகங்களின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க ஜீப் மிடிவு செய்துள்ளது. இதேபோன்று சர்வீஸ் மையங்களும் அதிகரிக்கப்படுகிறது.
    ×