search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance aid"

    பாராளுமன்ற தேர்தலின் ஓட்டுப்பதிவின் போது மயங்கி விழுந்து பலியான 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் ஓட்டுப்பதிவின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்த வேலூர் அனந்தலை கிராமத்தை சேர்ந்த துளசி அம்மாள், சிவகிரியை சேர்ந்த முருகேசன், கடையம் செண்டு, குறுங்கலூர் மல்லிகா, கோவை குறிச்சியை சேர்ந்த அய்யமாள், ஓமலூர் வேடப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், உசிலம்பட்டி புதூரை சேர்ந்த முத்துப்பிள்ளை, மேட்டூர் ஆவடத்தூரை சேர்ந்த ஜனார்த்தனன் ஆகியோர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இந்த 8 பேர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிர் இழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதியன்று தனது வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது, விஷ வாயு தாக்கி உயிர் இழந்தார். அவரை காப்பாற்றச் சென்ற அவருடைய மகன்கள் கார்த்தி மற்றும் கண்ணன், திருநெல்வேலியை சேர்ந்த பரமசிவம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரதாபிசி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகிய 5 பேரும் உயிர் இழந்தனர்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா மன்னை நகரில் தனியார் வெடிபொருள் உற்பத்தி கூடத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மன்னார்குடியை சேர்ந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, சுரேஷ் மற்றும் அறிவுநிதி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

    அவர்கள் மரணமடைந்த செய்தியை அறிந்து மார்ச் 27-ந் தேதியன்றே இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன். வெடிவிபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிர் இழந்த 12 பேரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    அரியலூர் மாவட்டத்தில் குளிர் தாங்காமல் உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தா. பழூர் மதுரா, பாலசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப் பிரியாவின் மகன்கள் ராமன், லட்சுமணன் ஆகிய இரட்டை குழந்தைகளும், மழையின் காரணமாக, தொகுப்பு வீட்டின் கூரை மற்றும் தரைதளம் வழியாக நீர் கசிவு ஏற்பட்டு, குளிர் தாங்காமல் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    வடகிழக்கு பருவமழையின் போது, குளிர் தாங்காமல் உயிரிழந்த குழந்தைகள் ராமன், லட்சுமணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாவட்ட ஆட்சியரின் அறிக்கையினை கருத்தில் கொண்டு இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNCM #Edappadipalaniswami
    காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் கிராமம், பெரியண்ணன் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவருடைய குடும்ப நண்பர்கள் என மொத்தம் 6 நபர்கள் நேற்று காலை காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் சரவணன், அவருடைய மனைவி ஜோதி மணி, மகன்கள் தீபகேஷ், சாரகேஷ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி தேவி ஆகிய 5 நபர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

    காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவிரி ஆற்றில் மூழ்கிய செல்வி ஹர்சிகா என்பவரை தேடும் பணியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் வருவாய் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே, கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நீர் நிலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்க செல்லும் போது, காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
    பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்க கூடாது என்று நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #NikkiHaley #US #Pakistan
    வாஷிங்டன்:

    அமெரிக்க வாழ் இந்தியரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் டிரம்ப் அரசின் புதிய கொள்கைகளை பாராட்டி உள்ளார்.

    அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை மற்றும் வளத்தை கருத்தில் கொண்டு புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா வெளிநாடுகளுக்கு நிதி உதவி செய்கிறது. அதே நேரத்தில் அவர்களிடம் இருந்து அதற்கான பிரதி பலன் திரும்ப கிடைக்கிறதா? என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது.

    அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெறும் பாகிஸ்தான் ஐ.நா.சபையில் பல விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்துள்ளது.

    2017-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ரூ.7100 கோடி (1 பில்லியன் டாலர்) நிதி உதவி பெற்றது. இது அதிக பட்ச நிதியாகும். இந்த நிதி பாகிஸ்தான் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, நெடுஞ்சாலை, மின் திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்பட்டன.


    இத்தகைய வெளிநாட்டு நிதி உதவி நண்பர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களில் 76 சதவீத அளவுக்கு பாகிஸ்தான் எதிராகத்தான் வாக்களித்துள்ளது.

    பாகிஸ்தான் பயங்கரவாதிளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவது நீண்ட கால வரலாறு. அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவித்தனர்.

    இத்தகைய சூழ்நிலையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்க கூடாது. இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அரசு புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளது.

    எனவே பயங்கரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது நடவடிக்கையை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நிக்கி ஹாலே தென் கரோலினா மாகாணத்தின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து விலகினார். #NikkiHaley #US #Pakistan
    பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு, காசிபாளையம் கிராமத்திலிருந்து, தனியார் வாகனத்தில் ஏற்றி வந்த வெடி பொருட்கள் வெடித்ததில், கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், மதுசூதனபுரத்தைச் சேர்ந்த சகாயம் கடலில் குளித்த போது, அலையில் சிக்கி உயிரிழந்தார். ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜெபனேஷ் மீன் பிடிக்கச் சென்ற போது, கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

    வாணியம்பாடி, ஆலங்காயத்தைச் சேர்ந்த மகாலட்சுமி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். கடையநல்லூர், சேர்ந்த மங்கலம் மற்றும் நயினாகரம் கிராமங்களைச் சேர்ந்த சிறுவன் கிரண், செல்வன் கோபி ஆகிய இருவரும் பட்டாக்குளத்தில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
    மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குப்பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் மின் கம்பம் நடும் பணிக்கு, அவ்வழியே சென்று கொண்டிருந்த, மாரிமுத்து மகன் சரவணன் என்பவரை அழைத்து, அப்பணியினை மேற்கொண்டிருந்த போது, எதிர் பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சரவணனின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami
    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #edappadipalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிகையில் கூறி இருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், வாணகிரி கிராம கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள், விவேகா, மஞ்சு மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகியோர் கடல் அலையில் மூழ்கி உயிரிழந்தனர்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிறுவன் ஜெயசூர்யா கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கென்னடி மகன் செல்வன் ரிஷோர் மற்றும் செல்வன் மகன் செல்வன் சந்தியாகு ராயப்பன் ஆகிய இருவரும் கடலில் குளிக்கச் சென்ற போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உச்சப்பா மகன் ராஜப்பா தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் கணேசன் பனைமரத்தில் பதநீர் சேகரிக்க ஏறும் போது மரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம், புளியமரத்துக்கோட்டை கிராமம், கோடாங்கி பட்டியைச் சேர்ந்த மோகன சுந்தரம் மகள் சிறுமி சபீதா கிணற்றில் தவறி விழுந்ததை அறிந்த சுமதி தன் இடுப்பில் வைத்திருந்த கைக்குழந்தை தீபிகாவுடன் காப்பாற்ற முயன்றபோது மூவரும் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த திருமால் மகன் அய்யாவு தென்னை மரம் ஏறும் போது, கடந்தைகள் கொட்டி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், முல்லையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் கீர்த்தனா குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.

    பொன்னமராவதி வட்டம், செவலூர் விளக்கு அருகில் அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராமன் மகன் பால சுப்பிரமணியன் மற்றும் திரு. செல்லையா மகன் வினோத் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNCM #edappadipalaniswami
    காட்டு யானை தாக்கி உயிர் இழந்த வனக்காவலர் மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டூர் தரப்பு, கண்டகானப்பள்ளி கிராமத்தின் அருகே 6.1.2019 அன்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பச்சபனட்டி தரப்பு, கோட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த வனக்காவலர் மாரப்பன் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, வீர தீர செயல் மற்றும் அசம்பாவித சூழ்நிலையில் உயிர் இழந்தால், அவர்களின் குடும்ப நலன் கருதி, வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை நான்கு லட்சத்திலிருந்து, பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க 6.10.2017 அன்று ஆணையிட்டிருந்தேன். இந்த ஆணையின்படி, இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த 5 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை புறநகர், பூந்தமல்லியில் தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்த சதீஷ், கடலூர் மாவட்டம், முதுநிலை தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்கள்.

    சாத்தான்குளத்தில் யந்திர கம்பியர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த திருமலைராஜ், திண்டுக்கல் மாவட்டம், தீத்தடுப்புக் குழு, நிலைய அலுவலர் சுந்தர மூர்த்தி, கோவை அன்னூரில் தீ அணைப்பாளர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த தீயணைப்பாளர் மற்றும் யந்திர கம்பியர் ஓட்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மேற்கண்ட ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNGovt #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் கிராமம், ஆழங்காணிவிளையைச் சேர்ந்த பால்ரெத்தினம் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, லாரி மோதியதால், மின்கம்பம் உடைந்து அவர் மீது விழுந்து உயிரிழந்தார்.

    கடலூர் மாவட்டம், குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகள் நித்திஷா வயலில் விளையாடச் சென்ற போது, தேங்கிய மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.

    விழுப்புரம் மாவட்டம், தகடி கிராமத்தைச் சேர்ந்த முனியன் (லேட்) மனைவி சௌபாக்கியம் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், வடகரை கீழ்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த அப்துல்கப்பார் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்றின் காரணமாக தவறி குளத்தில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து மனைவி சுந்தரம் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், கோலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இச்சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNGovt #TNCM #EdappadiPalaniswami
    பல்வேறு சம்பவங்களில் பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு பிரசாத், ஸ்ரீநவீன், கதிரவன், சிவபாலன் ஆகிய 6 மாணவர்கள் காவேரி ஆற்றில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம், எ.சாத்தனூர் மதுரா அஜிஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே 19-ந்தேதி அன்று பேருந்தும், லாரியும் மோதியதில் ஓட்டுநர் அலெக்சாண்டர், கிளினர் சக்திவேல், விருதுநகரைச் சேர்ந்த பயணி மோனிஷா மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
    ×