search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Finland PM"

    • 2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர்.
    • 19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

    பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார்.இந்நிலையில், மூன்று வருட திருமண வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தின் தனித்தனி பக்கத்தில், "19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமையில் ஒன்றாக வாழ்ந்தோம், ஒன்றாக இளமைப் பருவத்தில் நுழைந்தோம், எங்கள் அன்பான மகளுக்கு ஒன்றாக பெற்றோராக வளர்ந்தோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

    • அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
    • சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ஆபாச புகைப்படத்தால் பிரச்சனை எழுந்துள்ளது.

    ஹெல்சின்கி :

    34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்ற சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சன்னா மரின் போதைப்பொருளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலக வலியுறுத்தின. எனினும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் சன்னா மரின் எந்தவிதமான போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் சன்னா மரின் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

    சன்னா மரினின் வீட்டில் 2 பெண்கள் மேலாடை இன்றி உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்ற போதிலும் அது அவரது வீட்டில் எடுக்கப்பட்டது என்பதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நாட்டு மக்களிடம் சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "என் கருத்துப்படி, அந்த புகைப்படம் பொருத்தமானது அல்ல. அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்திருக்க கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

    • லேசான அறிகுறிகளே இருப்பதாக சன்னா மரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • அனைத்துக் கட்சிக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய ஒளிபரப்பாளர் அறிவித்தார்.

    ஹெல்சின்கி :

    பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு சன்னா மரின் (வயது 36), உடல் வெப்பநிலை அதிகரித்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஆனாலும் லேசான அறிகுறிகளே இருப்பதாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சன்னா மரின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்தது. காலையில் நான் கொரோனா பரிசோதனை செய்தேன்.

    அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அறிகுறிகள் லேசானவை மற்றும் நான் நன்றாக உணர்கிறேன். அதிக பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.

    நேற்று முன்தினம் பாராளுமன்ற அமர்வில் மரின் கலந்துகொண்டதாகவும், மாலையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சரவைக் கட்சிகளின் பாரம்பரிய கோடை கொண்டாட்டத்தை நடத்தினார் என்றும் தேசிய ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.

    மேலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து பிரதமரின் அட்டவணையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அவசரச் சட்டச் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று பிற்பகல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய ஒளிபரப்பாளர் அறிவித்தார்.

    ×