என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Look"

    • பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
    • இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் வெற்றிகரமாக பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் சமீப காலமாக நடிகராகவும் வளம் வருகிறார்.

    இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது.

    அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ஜி.வி இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களிலும் பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டானது.

    இதனிடையே பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.
    • கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார்.

    Mudhra's film factory தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான "தடை உடை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

    சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.

    நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

     

    கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக் கொண்டாட, ஒரு கலக்கலான திரைப்படம் இதுவென்பதை உறுதி செய்வதாக உள்ளது. அசத்தலாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.

    பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை Mudhra's film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

    தொழில் நுட்ப குழுவினர்

    எழுத்து இயக்கம் - ராகேஷ் N.S

    தயாரிப்பு - ரேஷ்மி மேனன்

    ஒளிப்பதிவு - K.A.சக்திவேல்

    இசை - ஸ்ரீ

    பின்னணி இசை- ஸ்ரீகாந்த் தேவா

    பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து

    படத்தொகுப்பு - பொன் கதிரேஷ் PK

    கூடுதல் திரைக்கதை - சாய்ராம் விஷ்வா

    லைன் புரடியூசர் - திலீப் குமார்

    நிர்வாக தயாரிப்பு - R.P.பால கோபி

    கலை - M.தேவேந்திரன்

    மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

    • "திட்டம்- 2" மற்றும் "அடியே" ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்.
    • நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    "திட்டம்- 2" மற்றும் "அடியே" ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

    இந்த படத்தை செவன் வாரியர் பிலிம்ஸ் மற்றும் வெயிலோன் எண்டர்டெயின்மென்டுடன் ஜேஜேபி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது.

    இந்நிலையில், இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை இன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    அதன்படி, இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    படத்தின் பெயர் ஹாட் ஸ்பாட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் தளத்தில்," படம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிகிறது. ஹாட் ஸ்பாட் படத்தின் பர்ஸ்ட் லுக் பகிர்வதில் மகிழ்ச்சி.

    பட குழுவிற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
    • இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியானது. டி50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    இந்நிலையில் ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

    இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டது.

    • தனுஷ் நடிக்கும் அவரது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி வருகிறார்
    • இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்

    ராயன் படத்தின் நடித்துள்ள நடிகை துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

    தனுஷ் நடிக்கும் அவரது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார்
    • படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான  ஷங்கர் என்பவர் இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் கதை தற்போது நிகழும் சமூக பிரச்சனையை பேசக்கூடியதாக இருக்கும் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். வெப்பம் குளிர் மழை படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. கதாநாயகன் பால் கேனை தூக்கிக் கொண்டு இருப்பது போலவும், மாட்டின் தலைக்கு பதில் கதாநாயகியின் தலை வைக்கப்பட்டிருக்கிறது. மாட்டின் வயிற்றில் மனித சிசு வளர்வது போன்ற காட்சிகள் போஸ்டரில் காணப்படுகிறது. இத்திரைப்படம்  எதை பற்றி பேசப்போகிறது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

    • இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
    • நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன்.

    இசைத் துறையில் 47 வருடங்களாக யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

    இளையராஜாவை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேதை இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர்.





    இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய 'பயோபிக்' உருவாகிறது.இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கை குறித்த சம்பவங்கள் இடம்பெறுகிறது.

    இந்தப்படத்தை சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தனுஷ், "நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.
    • வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது

    பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிரமாண்ட சண்டைக் காட்சியில் எதிரியின் நெஞ்சில் ஏறி தன்ஷிகா ஆவேசமாக கால் வைத்து நிற்பது போன்று அந்த போஸ்டர் காட்சி இடம் பெற்று உள்ளது.

    இந்த படப்பிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த படம் விரைவில் தன்ஷிகாவுக்கு 'ஆக்ஷன்' நாயகி என்ற பட்டத்தை பெற்று தரும் ரசிகர்கள் இணைய தளத்தில் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர் 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விமல் நடிக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட்-லுக் வெளியானது. பசங்க, களவாணி திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்தார் நடிகர் விமல்.

    தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்த அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

    விமல் நடித்த வாகை சூடவா திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல். அவர் நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் மதிப்புமிக்க தேசிய விருதை பெற்றுள்ளது.

    கிட்டதட்ட 3 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த விமல், அதன் பிறகு வெப் சீரிசிலும் நடித்தார். இதற்கிடையில் நடிகர் விமல், போஸ் வெங்கட் இயக்கும் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.

    இதனையடுத்து, விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் `போகுமிடம் வெகுதூரமில்லை'என்ற திரைப்படம் உருவாகிறது. மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவில் இடம்பெறும் நகைசுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர்
    • யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

    தமிழ் சினிமாவில் இடம்பெறும் நகைசுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன் பின்னர் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து வந்த யோகி பாபு தற்போது பல முன்னணி நட்சத்திரங்களால் பாராட்டைப் பெற்ற நடிகராக திகழ்கிறார்.

    தற்பொழுது உள்ள தமிழ் சினிமாவில் எந்த திரைப்படத்திற்கு சென்றாலும் யோகி பாபுவை காணலாம். அத்தனை திரைப்படங்களில் மிகவும் பிசியா நடித்து வருகிறார்.

    யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அவரை கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன், ஜெயிலர் போன்ற படங்களில் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஜவான் படத்திலும் அறிமுகமாகி தனது இருப்பை பாலிவுட்டிலும் உறுதி செய்தார் யோகி பாபு.

    இந்த நிலையில் தற்போது வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இதனை நடிகர் விஜய் சேதுபது தற்பொழுது அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இப்போஸ்டரில் யோகிபாபு மேஜிக் செய்யும் வித்தகன் வேடத்தில் ஒரு சோஃபாவில் அமர்ந்து இருக்கிறார். படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது
    • ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் இன்று (மே 29) வெளியிடுவதாக தகவல் வெளியானது.

    வெங்கட் பிரபு வெளியிட்ட 'நான் வயலன்ஸ்' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!

    தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் இன்று (மே 29) வெளியிடுவதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று காலை காலை 11 அளவில் இருவரும் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் 'நான் வயலன்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

     

    ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் எடுக்கப்பட்டு வருவைது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.
    • இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.\

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×