search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Five dead"

    தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். #SouthKorea #Apartment #FireAccident
    சியோல்:

    தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்தார். அதன் பின்னர் கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், 2-வது தளத்துக்கு சென்று நின்றார். இதற்கிடையில், அவரது வீட்டில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடிவந்தனர். அப்போது, அவர்களை 2-வது தளத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர். பின்னர் 4-வது மாடியில் எரிந்த தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரிடம் அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.   #SouthKorea #Apartment #FireAccident 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட வாகனங்களில் சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Kishtwarlandslide
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள பட்டார் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றுவரும் மச்சைல் யாத்திரையில் பங்கேற்பதற்காக இன்று பலர் டோடா-கிஷ்த்வார் சாலை வழியே வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, காலை 10.30 மணியளவில் குல்லிகாட் என்னும் இடத்தில் பாறைகள் சூழ்ந்த  பகுதியில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு காரும் மினி பஸ்சும் சிக்கி, புதையுண்டது.

    இடிபாடுகளில் சிக்கி இந்த வாகனங்களில் சென்ற ஒரு பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #Kishtwarlandslide
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். #Indonesiaearthquake
    ஜகார்த்தா:

    பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பீதியில் இருந்து மீள்வதற்குள், இந்தோனேசியாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.

    ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவானது.



    அதன்பின்னர் லோம்பாக் தீவில் நேற்று மாலை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

    இந்த நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் லோம்போக் தீவில் 2 பேரும், அருகில் உள்ள சாம்பவா தீவில் 3 பேரும் என மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். #Indonesiaearthquake

    ×