என் மலர்
நீங்கள் தேடியது "Flood Hit"
- வெள்ளப் பெருக்கில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
- வெள்ளம் காரணமாக பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
மாட்ரிட்:
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது.
அங்குள்ள கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்தது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள், கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வாலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கிய பலர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. வாலென்சியா பகுதியில் மட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
மீட்புப் பணிகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் மாயமாகி உள்ளதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 24 லட்சத்துக்கும் அதிகமான அசாம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சில மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்று ஆற்றுக்குள் மூழ்கியது குறித்த வீடீயோ வெளியாகி உள்ளது.
நல்பாரி மாவட்டத்தில் இரண்டு அடுக்குமாடி கொண்ட காவல்நிலையத்தை சுற்றி வெள்ளநீர் அதிகரித்து வந்த நிலையில், அரிப்பு காரணமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஆற்றுக்குள் மூழ்கியது. இதை அங்கிருந்த கிராம மக்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். அந்த காவல்நிலைய கட்டிடம் நீண்ட நாட்களாக காலியாக இருப்பதால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை.
#WATCH | A part of the two-storied building of Bhangnamari police station sinks due to flood in Assam's Nalbari district
— ANI (@ANI) June 28, 2022
(Source: Unverified) pic.twitter.com/CMHpcgpHmN
பிரம்மபுத்திரா ஆற்றின் அருகே அமைந்துள்ள பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், கச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்க ளில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
28 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரம் உள்ளிட்ட பல பகுதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.