என் மலர்
நீங்கள் தேடியது "Foldable Phone"
- மோட்டோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம்.
- புதிய மோட்டோ ஃபோல்டபில் போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஜூலை மாத துவக்கத்தில் மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகி உள்ளது. மோட்டோ ரேசர் 40 மற்றும் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஜூலை 4-ம் தேதி இந்யாவில் அறிமுகமாகின்றன. அறிமுக நிகழ்வு ஜூலை 4, மாலை 6 மணிக்கு துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கான டீசர்களை மோட்டோரோலா வெளியிட்டு உள்ளது.

மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீனா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 3.6 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144 Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
மோட்டோ ரேசர் 40 மாடலில் சற்றே சிறிய 1.47 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, உள்புறத்தில் 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரும், ரேசர் 40 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம், மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ரேசர் 40 மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
- புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
- ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.
- ஹூவாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஹூவாய் நிறுவனம் வருகிற 10 ஆம் தேதி தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், அதற்கு அடுத்த நாளிலேயே ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.
புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஹூவாய் நிறுவனம் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை மூன்றாக மடிக்க முடியும் என்று தெரிகிறது. ஹூவாய் நிறுவனம் இத்தகைய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பது அனைவரும் அறிந்தது தான்.
முன்னதாக ஹூவாய் நுகர்வோர் வியாபார பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு புதுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது இதனை ஹூவாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பான பதிவில் ரிச்சர்ட் யு, "ஐந்து ஆண்டுகள் விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளால், நாங்கள் அறிவியல் புனைவை நனவாக்கியுள்ளோம். இது ஹூவாயின் அதிநவீன, புதுமை மிக்க சாதனமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
- குறைந்த எடையிலான டிசைன், அதிநவீன ஏ.ஐ. வசதிகளை கொண்டிருக்கிறது.
- 70 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேண்டம் V2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்- பேண்டம் V போல்டு 2, பேண்டம் V ப்ளிப் 2 மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய பேண்டம் V2 சீரிஸ் மாடல்களில் ஏர்செல் பேட்டரி தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய - குறைந்த எடையிலான டிசைன், அதிநவீன ஏ.ஐ. வசதிகளை கொண்டிருக்கிறது.
பேண்டம் V போல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.85 இன்ச் மெயின் ஸ்கிரீன், 6.42 இன்ச் கவர் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. பேண்டம் V ப்ளிப் 2 மாடலில் 6.9 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, 3.64 இன்ச் கவர் ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 8 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

பேண்டம் V போல்டு 2 அம்சங்கள்:
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
12 ஜிபி ரேம்
512 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு கேமரா
32MP+32MP செல்பி கேமரா
5750 எம்ஏஹெச் பேட்டரி
70 வாட் அல்ட்ரா சார்ஜ்
15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

பேணடம் V ப்ளிப் 2 அம்சங்கள்:
டிமென்சிட்டி 8020 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன்
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்பி கேமரா
4720 எம்ஏஹெச் பேட்டரி
70 வாட் அல்ட்ரா சார்ஜ்
விலை விவரங்கள்:
டெக்னோ பேண்டம் V ப்ளிப் 2 மாடலின் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் V போல்டு 2 விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என்று டெக்னோ அறிவித்து இருக்கிறது. இரு மாடல்களின் விற்பனை டிசம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.





I can't speak for Samsung...
— Evan Blass (@evleaks) October 31, 2018
...but I do know that LG plans to unveil a foldable phone at its 2019 CES keynote.
