என் மலர்
நீங்கள் தேடியது "Former CBIJD"
சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநர் வி.வி. லக்ஷ்மிநாராயணா விஜயவாடாவில் இன்று நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார். #FormerCBIJD #Lakshminarayana #Janasena #PawanKalyan
ஐதராபாத்:
ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரணை செய்த சி.பி.ஐ. சிறப்பு குழுவில் முன்னர் இணை இயக்குநராக பதவி வகித்தவர் வி.வி. லக்ஷ்மிநாராயணா.
பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், சமூகச்சேவைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜயவாடாவில் இன்று நடிகர் பவன் கல்யானை சந்தித்த லக்ஷ்மிநாராயணா, அவரது தலைமையிலான ஜனசேனா கட்சியில் இணைந்தார். இதேபோல், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் இன்று ஜனசேனாவில் இணைந்தார்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடையே பேசிய பவன் கல்யாண், வரும் தேர்தலில் கூட்டணி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். #FormerCBIJD #Lakshminarayana #Janasena #PawanKalyan