என் மலர்
நீங்கள் தேடியது "former chinese vice finance minister arrested"
சீனாவின் முன்னாள் துணை நிதி மந்திரி சாங் ஷாவ்சுன் ஊழல் புகாரில் இன்று கைது செய்யப்பட்டார். #ZhangShaochunarrested #corruptioncharges
பீஜிங்:
சீனாவில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு உள்ளாகும் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் க்சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் பல முன்னாள் மந்திரிகளும், முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளை லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிதித்துறை முன்னாள் துணை மந்திரி சாங் ஷாவ்சுன் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எதையும் சீன ஊடகங்கள் வெளியிடவில்லை. #ZhangShaochunarrested #corruptioncharges