search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Data"

    • 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் பயன்பெற முடியும்.
    • 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு இலவச டேட்டா வழங்கி வருகிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் 5ஜி அல்லது 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பிரீபெயிட் பயனர்கள் பயன்பெற முடியும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 13 முறை 10 ஜி.பி. வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையின் முழு பயன்களை பெற பயனர்கள் பிரீபெயிடில் இருந்து போஸ்ட்பெயிடுக்கோ அல்லது நம்பரை செயலிழக்க செய்யவோ, ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் சலுகையை மாற்றவோ வேண்டாம் என வி தெரிவித்துள்ளது.

     


    வி கியாரண்டி திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அதிகபட்சம் 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இந்த சலுகையை பெறும் பட்சத்தில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா 10 ஜி.பி. வீதம் 13 தவணைகளில் வழங்கப்படும். இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையை பெற பயனர்கள் குறைந்தபட்சம் ரூ. 239 துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் உள்ள பிரீபெயிட் சலுகையை பயன்படுத்த வேண்டும். மேலும், பயனர்கள் இதே சலுகையை தொடர்ச்சியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சலுகை மே 25 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஜூன் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    சலுகையில் பயன்பெறுவது எப்படி?

    - பயனர்கள் வி நெட்வொர்க்கில் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும்.

    - ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், வடகிழக்கு மற்றும் ஒரிசா டெலிகாம் வட்டாரங்களை சேர்ந்த பயனர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.

    - பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருந்து 121199 அல்லது 199199# என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

    - முந்தைய ஆப்ஷனில் குறிப்பிடப்பட்டு இருக்கும் யு.எஸ்.எஸ்.டி. எண்களை தொடர்ந்து வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

    - இவ்வாறு செய்த பிறகு, சலுகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் வரும்.

    - கூடுதல் டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை பயனர்கள் *199# என்ற யு.எஸ்.எஸ்.டி. குறியீட்டை கொண்டு சரிபார்க்க முடியும்.

    ×