search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freedom of speech"

    • இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.
    • சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை விட நல்ல நிலையில் உள்ளன.

    பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்துள்ளது . அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் 'Future Free Speech' என்னும் அமைப்பு பேச்சு சுதந்திரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.

    பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஹங்கேரி (85.5) மற்றும் வெனிசுலா (81.8) போன்ற சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை  விட நல்ல நிலையில் முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது குறித்த பேச்சு சுதந்திரம் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. தனிப்பட்ட பேச்சு, ஊடகம் மற்றும் இணையம் தொடர்பான தணிக்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    • நவம்பர் 28 வரை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது
    • எழுத்தாளர் கிரீன்வால்டின் கருத்தை ஆமோதித்தார் மஸ்க்

    "இணையதள ஸ்ட்ரீமிங் சட்டம்" எனும் புது சட்டத்தின் மூலம் 10 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் இணையதள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் பதிவு செய்து அரசு விதிக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கனடா அரசாங்கத்தின் வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய நவம்பர் 28 வரை காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவு, ஆடியோ-வீடியோ சேவைகளை வழங்கும் பல வலைதளங்கள் உட்பட சமூக வலைதளங்களுக்கும், இணையவழி சந்தாதாரர் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

    "உலகத்திலேயே கனடா அரசாங்கம்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பிற்போக்கு வழிமுறைகளை கையாண்டு வருகிறது" என இதனை குறித்து கெல்ன் கிரீன்வால்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

    "ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார். வெட்கக்கேடு" என குறிப்பிட்டு, கிரீன்வால்டின் கருத்தினை ஆமோதிக்கும் வகையில் எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரும் உலகின் நம்பர் 1. பணக்காரரான அமெரிக்கர் எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    கனடா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    ×