search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "french open 2018"

    7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் ரபெல் நடால். #FrenchOpen
    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது.

    இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) பலப்பரீட்சை நடத்தினார்.

    செம்மண் கோர்ட் ராஜாவான நடாலின் ஆட்டத்திற்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றினார். 3-வது செட்டையும் 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 11-வது முறையாக பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ருசித்தார். #FrenchOpen2018 #Nadalvsthiem
    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலும் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அர்ஜென்டினாவின் ஸ்வார்ஸ்யினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரான நடால் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார். நடப்பு சாம்பியனாக அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்தும் ரபேல் நடாலுக்கு டெல்போட்ரோ கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

    மற்றொரு அரை இறுதியில் டொமினிக் திம் (ஆஸ்திரியா)- மார்கோ செச்சினட்டோ (இத்தாலி) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீராங்கனை ஹால்ப் (ருமேனியா)- ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் டொமினிக் திம், மேடிசன் கீஸ் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen2018 #DominicThiem
    பாரீஸ்:

    பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர்.

    ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார். ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

    பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிலிச் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.  #FrenchOpen2018 #DominicThiem  #tamilnews 
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவரான டேவிட் கோபின் அதிர்ச்சிகரமாக தோற்றார். #FrenchOpen #DavidGoffin
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தற்போது தர வரிசையில் 20-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் 2-ம் நிலை வீரர் ஸ்வேரேவ் (ஜெர்மனி), 7-வது வரிசையில் உள்ள டொமினிக் தியம் (ஆஸ்ரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். இருவரும் கால் இறுதியில் மோதுகிறார்கள்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவரான டேவிட் கோபின் (பெல்ஜியம்) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இத்தாலியை சேர்ந்த மார்கோ சேச்சினடோ 7-5, 4-6, 6-0, 6-3 என்ற கணக்கில் 8-ம் நிலை வீரான கோபினை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), யூலியா புடின் சேவா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெறும் 4-வது சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்)- மேக்சிமிலன் மார்ட்டரர் (ஜெர்மனி), சிலிச் (குரோஷியா)- பேபியோ போகினி (இத்தாலி), டெல் போட்ரோ (அர்ஜென்டினா)- இஸ்னர் (அமெரிக்கா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா)-டியாகோ (அர்ஜென்டினா) மோதுகிறார்கள்.

    பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ‌ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹெலப் (ருமேனியா)- மெர்டன்ஸ் (பெல்ஜியம்), முகுருஜா (ஸ்பெயின்)- லெசியா (உக்ரைன்), கெர்பர் (ஜெர்மனி)-கார்சியா (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.

    இதேபோல் நேற்று பாதியில் நிறுத்தப்பட்ட வோஸ்னியாக்கி மோதும் ஆட்டமும் இன்று நடக்கிறது.#FrenchOpen #DavidGoffin
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். #NovakDjokovic #AlexanderZverev #DominicThiem #FrenchOpen2018

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஒரு ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டஸ் வெர்டஸ்கோ ஆகியோர் மோதினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தெய்ம், ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். இப்போட்டியில், தெய்ம் 6-2, 6-0, 5-7, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.



    மற்றொரு போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் - ரஷியாவின் கரன் கச்சனோவ் ஆகியோர் மோதினர். இதில், ஸ்வரேவ் 4-6, 7-6, 2-6, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். 

    இதன்மூலம் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். #NovakDjokovic #AlexanderZverev #DominicThiem #FrenchOpen2018
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.#FrenchOpen2018 #NovakDjokovic
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-1), 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் தகுதி சுற்று வீரர் ஜார்மி முனாரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #FrenchOpen2018 #NovakDjokovic
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நடால் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. #FrenchOpen #nadal
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப்போட்டியின் 2-வது நாள் ஆட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நடால் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அவர் தொடக்க சுற்றில் இத்தாலியை சேர்ந்த சிமோன் போலிலியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 6-3, 0-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.



    இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த பல ஆட்டங்களும் பாதிக்கப்பட்டது. இதே போல பெண்கள் பிரிவில் ‌ஷரபோவா மோதிய ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டங்கள் இன்று நடக்கிறது. #FrenchOpen #nadal
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் வீழ்ந்தார்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6-1, 6-4, 7-6 (7-1) என்ற நேர் செட்டில் முகமது சவாத்தை (எகிப்து) தோற்கடித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். பிரெஞ்ச் ஓபனில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதே போல் தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் குயாங் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் மங்கை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார். 
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். #Gunneswaran #FrenchOpen2018
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் தகுதி சுற்றில் விளையாடி வந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) சந்தித்தார். இதில் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்று நாளை தொடங்குகிறது. #Gunneswaran #FrenchOpen2018
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். #Gunneswaran #FrenchOpen2018
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. இதன் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) இன்று சந்திக்கிறார். இதில் குணேஸ்ரன் வெற்றி பெற்றால் பிரதான சுற்றை எட்டுவார். 
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா, ரஷியாவின் எவ்ஜினியாவிடம் 3-6, 6-7(2-7) என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்பதித்த இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் ரஷியாவின் எவ்ஜினியா ரோடினாவை நேற்று எதிர்கொண்டார். இதில் ரெய்னா 3-6, 6-7(2-7) என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடங்கள் நடந்தது. 
    ×