search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "friend arrest"

    • குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது.
    • மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிட்டிக்கோடு கோலயம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ(வயது30). இவர் கடந்த வாரம் கல்லம்பலம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பின்பு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி ராஜூ இறந்திருக்கிலாம் என்று முதலில் கருதப்பட்டது.

    ஆனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை யாரேனும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆகவே தங்களின் விசாரணையை துரிதப்படுத்தினர். ராஜூவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது ராஜூ இறந்து கிடந்த தினத்தன்று, அவரது நண்பரான சிட்டிக்கோடு வலிகாவு பகுதியை சேர்ந்த சுனில்(41) என்பவருடன் இருந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். இதனால் சுனிலை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்த சுனில், பின்பு ராஜூவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

    அவர் குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று ராஜூவும், சுனிலும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது சுனில் வைத்திருந்த மதுபான கோப்பையை ராஜூ தெரியாமல் தட்டி விட்டதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சுனில், ராஜூவுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்பு இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். ராஜூ அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றிருக்கிறார்.

    அவரை பின்தொடர்ந்து சென்ற சுனில், குளத்தின் கரையில் வைத்து ராஜூவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ராஜூவை தண்ணீரில் மூழ்கடித்து சுனில் கொலை செய்துள்ளார். அவர் இறந்ததை உறுதிசெய்த பிறகு சுனில் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்.

    நண்பரை கொன்ற சுனில், கடந்த ஒரு வாரமாக வழக்கம்போல் இருந்துள்ளார். இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுனிலை போலீசார் கைது செய்தனர்.

    மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை ஒண்டிப்புதூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கு அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள தண்ணீர் தோட்ட வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் அன்னூர் அருகே உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் கட்டுமான பணிக்காக சென்றார். பணி முடிந்ததும் தனது நண்பரான ஒண்டிப்புதூர் நவரச காலனியை சேர்ந்த வேல்முருகன் (30) என்பவருடன் சேர்ந்து மது குடிப்பதற்காக சென்றார்.

    அன்னூர்-சத்தி ரோட்டில் சந்தையூர் பரிவு அருகே வைத்து 2 பேரும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் வேல்முருகன் கூடுதலாக மது வாங்குவதற்காக பணம் கொடுக்கும்படி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தான் வைத்து இருந்த மரக்கட்டையால் முருகனின் தலை மற்றும் உடலில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் முருகனை டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பீடி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தாலுகா ராமியாம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன் (36). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கேபிள் பதிக்க குழிதோண்டும் பணியில் இரவு ஈடுபட்டனர்.

    அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனை கீழே தள்ளி, அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் லட்சுமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் லட்சுமணனை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் அவினாசி அருகே வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அருகே லட்சுமணன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று லட்சுமணனை கைது செய்து விசாரித்தனர்.

    சம்பவத்தன்று முருகன், லட்சுமணனும் மது அருந்தி விட்டு வேலை செய்துள்ளனர். அப்போது முருகன், லட்சுமணனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் பீடி இல்லை என்று கூறியதாகவும், இதனால் முருகன், லட்சுமணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கைதான லட்சுமணனை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். பீடி கேட்ட தகராறில் தொழிலாளியை, உடன் வேலை செய்த நண்பரே கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மர்மமான முறையில் வாலிபர் கொல்லபட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் கடந்த 13-ந் தேதி வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் பல்லாவரத்தை சேர்ந்த வடிவேல் (வயது 40) என்பது தெரிந்தது. பண பிரச்சினையில் வடிவேலை நண்பரான பல்லாவரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து ராஜியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நானும், வடிவேலும் நண்பர்கள். எனக்கும் அவருக்கும் ஆட்டோ வாடகை மற்றும் ஆட்டோ வாங்கி விற்கும் தொழிலில் கொடுக்கல் வாங்கள் பிரச்சினை இருந்து வந்தது.

    நாங்கள் அடிக்கடி கோவளம் சென்று மது அருந்தி விட்டு விலைமாதுகளுடன் உல்லாசமாக இருப்போம். இதேபோல் சம்பவத்தன்றும் கோவளம் சென்றுவிட்டு அங்கிருந்து மாமல்லபுரம் சென்றோம்.

    வழியில் சூலேரிக்காடு அருகில் மது அருந்தும் போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேலை கழுத்தை நெரித்து கொன்றேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று ராஜியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கேரளாவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மார்க்சிஸ்டு தொண்டரை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு, உக்கிலாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் இரு மாணவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று மாணவர்கள் இருவரும் பள்ளி வகுப்பறையில் இருந்த தேர்வு தாள்களை எடுக்கச் சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது கைகலப்பாக மாறியது.

    அப்போது ஒரு மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்னொரு மாணவரை சரமாரியாக குத்தினார்.

    இதில் அந்த மாணவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு காசர்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போன மாணவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஜிலாக் (வயது16) என்பவர் ஆவார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது மஜிலாக்கை கொலை செய்ததாக பிளஸ்-1 மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காசர்கோடு உப்பாலா பகுதியைச் சேர்ந்தவர் சித்திக்(25). மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர். நேற்று பகல் 11 மணிக்கு சோன்கால் பகுதியில் நடந்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் சித்திக்கை வழி மறித்து சரமாரியாக தாக்கியது, அரிவாளாலும் வெட்டினர்.

    இதில் சித்திக் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் வழியிலேயே சித்திக் இறந்து போனார்.

    இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சித்திக் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினரே காரணம் என்றும் கூறினர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே மூதாட்டியை கொன்று நகையை பறித்த குடும்ப நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் ஒடத்தலாம்பதி ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜா (வயது 80). இவரை கடந்த மாதம் 2-ந்தேதி 2 பவுன் நகை மற்றும் மோதிரத்திற்காக மர்ம நபர் கொலை செய்தார்.

    இது குறித்து சரோஜாவின் பேரன் ஞானவேல் போலீசில் புகார் செய்தார். அவினாசி டி.எஸ்.பி. மேற்பார்வையில் குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, பழனிசாமி, கிருஷ்ணகுமார், தேவராஜ் ஆகியோர் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.

    28 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சரோஜாவின் குடும்ப நண்பரான பாலமுருகன் (32) என்பவரது தொலைபேசி எண்ணை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை பிடித்து அதிரடியாக விசாரித்தனர்.

    விசாரணையில் தானும், தனது நண்பர் சுகுமார் என்பவரும் சேர்ந்து மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த நகையை திருடினோம் என்று கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான நண்பர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜீவா நகரை சேர்ந்த பழனியின் மகன் மாணிக்கம் (வயது 22). நேற்று முன்தினம் இரவு இவர் காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பீர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், காயத்திரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த அவரது நண்பரான சிவா (22) என்பவரை கைது செய்தனர். காவேரிப்பட்டணத்தை அடுத்த கருக்கன்சாவடி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே நின்றிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    நண்பரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சிவா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தன்னை கரடி என்று மாணிக்கம் கிண்டல் செய்ததால் அவரை கொன்றதாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
    ×