என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » fuel price
நீங்கள் தேடியது "Fuel Price"
சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #FuelPrice #DharmendraPradhan
புதுடெல்லி:
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, சமீபத்தில் லிட்டருக்கு தலா ரூ.2.50-ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களும் தங்கள் வரியில் சிறிது குறைத்தன. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைந்தது.
இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு மீண்டும் விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக கூறியதாவது,
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 ரூபாய் வரை குறைத்தது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு மாநில அரசுகளும் விலையை மேலும் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுத்தன.
ஆனாலும், டெல்லி உள்ளிட்ட சில அரசுகள் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அது ஏன் என்று சம்பந்தப்பட்ட அரசுகளிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார். #FuelPrice #DharmendraPradhan #PetrolDieselPriceHike
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.86.51 ஆக உயர்ந்தது. டீசல் விலையும் 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.69-க்கு விற்கப்படுகிறது. #FuelPrice
சென்னை:
பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.86.51 ஆக உயர்ந்தது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.28-க்கு விற்கப்பட்டது.
கடந்த 19-ந்தேதி பெட்ரோல் விலை ரூ.85.41 ஆக இருந்தது. 9 நாளில் ஒரு ரூபாய் 10 காசுகள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
டீசல் விலையில் 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.69-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.78.49 ஆக விற்கப்பட்டது.
டீசல் கடந்த 19-ந்தேதி 78.10 ஆக இருந்தது. 9 நாளில் 59 காசுகள் அதிகரித்துள்ளது.
டெல்லியில் டீசல் ரூ.74.42-க்கும், பெட்ரோல் ரூ.83.22-க்கும் விற்கப்படுகிறது. மும்பையில் கடந்த 24-ந்தேதியே பெட்ரோல் ரூ.90-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது. #FuelPrice

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தெரிவித்தார். #Petrol #Diesel #AmitShah
ஐதராபாத்:
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே தெலுங் கானா மாநிலம் ஐதராபாத்தில் பேட்டி அளித்த பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக போரின் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பிரச்சினைகள் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும், பா.ஜனதாவும் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
மேலும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக கூறப்படுவது குறித்து அமித்ஷா பதில் அளிக்கையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும்போது மராட்டியத்திலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபங்களை பெற இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு இல்லை’ என்று தெரிவித்தார். #Petrol #Diesel #AmitShah

கடந்த 19 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்த்தப்பட்டதை அடுத்து மக்களை ஏமாற்றுவதே மோடியின் பொருளாதார கொள்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi
புதுடெல்லி:
கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 19 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. கடந்த 12-ம் தேதி தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘கர்நாடகா தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை, மக்கள் வாக்களித்து முடித்தவுடன், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மோடியின் பொருளாதார கொள்கையே முடிந்தவரை மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதாகும்’ என பதிவிட்டுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi
×

X