என் மலர்
நீங்கள் தேடியது "gajaraj"
- தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
- படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
"எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி. அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்த படத்தின் கதை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று தெரிவித்தார் இயக்குனர் .
'ஒரு நொடி' படத்தில் தமன்குமார், எம்.எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. காணாப்போன கணவனான எம்.எஸ் பாஸ்கர் தேடி போலிசிடம் புகார் கொடுக்கிறார் மனைவி. போலிஸ் கதாப்பாத்திரத்தில் தமன்குமார் நடித்துள்ளார். அதற்கடுத்து என்ன நடந்தது என்பதே கதை. டிரெயிலர் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
- திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையும், நடிகருமான கஜராஜ் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் சினிமா இன்று நல்ல நிலைமையில் உள்ளது. படித்தவர்கள் அதிகம் வருகிறார்கள். முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.

சிறிய பட்ஜெட்டில் அதிகளவில் படங்கள் வெளியாகிறது. திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள். இதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.
நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் இன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரிய மாறுதலாக கருதுகிறேன்.

முன்பு கதாநாயகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனக்கான வாய்ப்பு என் மகன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மூலம் வந்தது.
எனது தாய், தந்தை புண்ணியத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். என் மகனை பற்றி நான் சொல்வதை காட்டிலும் மக்கள் அதிகம் பேசுகிறார்கள். இதுவே எனக்கு பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.