search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy A10"

    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மூன்று கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. #GalaxyA #Smartphone



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 என மூன்று புதிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கியிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    மூன்று ஸ்மார்ட்போன்களில் டாப் எண்ட் மாடலான கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.



    கேலக்ஸி ஏ10 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 7884பி சிப்செட்
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஃபேஸ் அன்லாக் வசதி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 5 வாட் சார்ஜிங்
    - ஆண்ட்ராய்டு பை 



    கேலக்ஸி ஏ30 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 7904 சிப்செட்
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் சார்ஜிங்
    - ஆண்ட்ராய்டு பை 



    கேலக்ஸி ஏ50 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 9610 ஆக்டாகோர் சிப்செட்
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 25 எம்.பி. பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. டெப்த் சென்சார்
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் சார்ஜிங்
    - ஆண்ட்ராய்டு பை 

    சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,490 என்றும் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 2 ஆம் தேதி முதல் கிடைக்கும். கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் மார்ச் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 
    ×