search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy A50"

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது கேல்க்ஸி ஏ50 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.19,990 மற்றும் ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கேலக்லஸி ஏ 50 ஸ்மார்ட்போனின் இருவித வேரியண்ட்களின் விலையில் ரூ.1500 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் ரூ.1500 விலை குறைக்கப்பட்டு ரூ.18,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.21,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9610 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இவற்றுடன் பிக்ஸ்பி விஷன், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி ஹோம் மற்றும் பிக்ஸ்மி ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 25 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா, லைவ் ஃபோகஸ் மற்றும் 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மூன்று கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. #GalaxyA #Smartphone



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 என மூன்று புதிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கியிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    மூன்று ஸ்மார்ட்போன்களில் டாப் எண்ட் மாடலான கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.



    கேலக்ஸி ஏ10 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 7884பி சிப்செட்
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஃபேஸ் அன்லாக் வசதி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 5 வாட் சார்ஜிங்
    - ஆண்ட்ராய்டு பை 



    கேலக்ஸி ஏ30 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 7904 சிப்செட்
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் சார்ஜிங்
    - ஆண்ட்ராய்டு பை 



    கேலக்ஸி ஏ50 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 9610 ஆக்டாகோர் சிப்செட்
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 25 எம்.பி. பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. டெப்த் சென்சார்
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் சார்ஜிங்
    - ஆண்ட்ராய்டு பை 

    சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,490 என்றும் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 2 ஆம் தேதி முதல் கிடைக்கும். கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் மார்ச் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #GalaxyA50 #Smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங்கின் முதல் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக உருவாகி இருக்கிறது. 

    சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9610 10 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 25 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இவைதவிர புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் பே, பிக்ஸ்பி விஷன், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி ஹோம் மற்றும் பிக்ஸ்பி ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.



    சாம்சங் கேலக்ஸி ஏ50 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9610 10 என்.எம். பிராசஸர்
    - மாலி-G72 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளு மற்றும் கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் இந்திய விற்பனை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகி வருகிறது. #GalaxyA50 #Smartphone



    சாம்சங் நிறுவனத்தின் 2019 கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமராக்கள், 6.4-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகியிருக்கிறது. கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விவரங்களுடன் அதன் ரென்டர்களும் வெளியாகியிருக்கிறது.



    புகைப்படம் நன்றி: pricekart

    சாம்சங் கேலக்ஸி ஏ50 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 10nm பிராசஸர்
    - மாலி-G72 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.4 
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. #GalaxyA50 #Smartphone



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது.

    புதிய கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஓ அல்லது இன்ஃபினிட்டி யு நாட்ச், எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, உயர் ரக மாடலில் 6 ஜிபி. / 8 ஜி.பி. ரேம் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, கேலக்ஸி ஏ7 மாடலில் வழங்கப்பட்டிருந்ததை போன்ற சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. 



    சாம்சங் கேலக்ஸி ஏ50 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ., வயர்லெஸ் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் எனலாம். யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் முற்றிலும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் 2019, பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
    ×