search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy Note"

    சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரிஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யவே இல்லை. இந்த ஆண்டுக்கு பதில் 2022 ஆம் ஆண்டு புதிய நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிரந்தரமாக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

     கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்

    2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்தில் இருந்து கேலக்ஸி நோட் சீரிஸ் நீக்கப்பட்டு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது என தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    2019 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் 1.27 கோடி நோட் சீரிஸ் மாடல்களை விற்பனை செய்து இருந்தது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 97 லட்சம் நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன. 2022 ஆண்டு கேலக்ஸி இசட் சீரிஸ் விற்பனை இலக்கு 1.3 கோடி யூனிட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
    ×