search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy X"

    சாம்சங் நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் மூன்று டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று டிஸ்ப்ளேக்களை கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை சாம்சங் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, லெட்ஸ் கோ டிஜிட்டல் (LetsGoDigital) வெளியிட்டிருக்கும் தகவல்களில் நான்கு வெவ்வேறு வடிவமைப்புகளுக்கான காப்புரிமையை சாம்சங் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வடிவமைப்புகளும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கும் என்றாலும், இவற்றில் முன்பக்கம், பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் டிஸ்ப்ளே இருக்கும் என வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வடிவமைப்புகளை வைத்து பார்க்கும் போது மூன்று வடிமைப்புகளில் மெல்லிய பெசல்கள் பக்கவாட்டுகளில் இருக்கும் என்றும், இவற்றில் ஆன்டெனா பொருத்தப்படலாம் என்றும் நான்காவது வடிவமைப்பில் சாதனம் முழுக்க டிஸ்ப்ளே பரவியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே என்ன செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இது சிறிய மற்றும் வளையும் தன்மை கொண்ட ஆப்டிக்கல் டிரான்ஸ்பேரன்ட் லேயர் கொண்டிருக்கும் என்றும் இதனை சாதனத்தின் பக்கவாட்டில் வழங்க முடியும் என கூறப்படுகிறது.



    முன்பக்கம் மற்றும் பின்புறம் வழங்கப்படும் டிஸ்ப்ளேக்களை தனியே பயன்படுத்த முடியும் என கூறப்படும் நிலையில், பனர்கள் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். ஒருபுறம் இன்டர்நெட் மற்றொரு புறம் கேமிங் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த சாதனம் எதிர்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை அதிகளவு தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 1,00,000 யூனிட்களையும், அடுத்த ஆண்டு வாக்கில் பத்து லட்சம் யூனிட்களை தயாரிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

    ஏற்கனவே டி.ஜி. கோ வெளியிட்ட தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிலேயே வெளியிடலாம் என தெரிவித்திருந்தார். 

    புகைப்படம்: நன்றி LetsGoDigital
    ×