search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaming Center"

    • குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கேமிங் சென்டர்கள் எந்தவித பாதுகாப்பு சான்றிதழும் பெறாமல் 2 வ வருடங்களாக இயங்கிவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் குஜராத் உயர்நீதிமன்றம், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று (மே 27) நடந்த விசாரணையின்போது, கேமிங் சென்டரில் சில காலங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்திய புகைப்படங்களை நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்தது.

    புகைப்படங்களை வாங்கி பார்த்த நீதிபதி, "யார் இந்த அதிகாரிகள்? அவர்கள் அங்கு விளையாட சென்றார்களா? என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், விபத்துக்குள்ளான இந்த கேமிங் சென்டர்கள் எந்த அனுமதியும் இன்றி 2 வருடமாக இயங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாநில அரசும் இவ்வளவு காலமும் தூங்கிக்கொண்டிருந்ததா என கேள்வியெழுப்பிய அவர், இனியும் இந்த அரசை நம்பப்போவதில்லை என்று காட்டமாக தெரிவித்தார். அரசு இயந்திரங்கள் வேலை செய்யாதது காரணமாகவே மக்கள் இறக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

     

    ×