என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ganja seller arrested"
- கிரிவாயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கோபி அருகே மொடச்சூர் பகுதி அண்ணா நகரை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் கிரிவாயன் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
- போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கோபி கொங்கரபாளையம் பகுதியை சேர்ந்த ராமர் என்ற ராம்முருகன் (வயது 38) என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 12 கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
- கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த எரகனள்ளி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கல்மண்டிபுரம் குட்டை அருகே ஒரு வாலிபர் பையுடன் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து செல்ல முயன்றார்.
பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கல்மண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த சித்தராஜ் (28) என்பதும்,
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 750 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.
- ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
- சங்கர் என்ற நாராயணசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வளையக்கார வீதியில் ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்ற நாராயணசாமி (49) என்பவரை போலீசார் கைது செய்து,
அவர் விற்பனைக்கு வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை சத்யா தெருவில் மணிகண்டன் (வயது 22), அவருடன் ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மணிகண்டனை சிறையில் அடைத்தனர். சிறுவனை அங்குள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
- கம்பம் வடக்குபோலீசார் வாரச்சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அப்பகுதியில் கஞ்சா விற்றவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கம்பம்:
கம்பம் வடக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் வாரச்சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது உலகத்தேவர் தெருவை சேர்ந்த தங்கமலை(23) என்பவர் ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
- 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலை பட்டி புதூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த புங்கனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற மாயகிருஷ்ணன், மாதா கோவில் தெருவை சேர்ந்த வெள்ளை என்கிற தமிழரசன் (வயது26) ஆகியோர் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- மட்டப்பாறை பஸ்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் அவரை கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ்(45).
இவர் மட்டப்பாறை பஸ்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜெயராஜை கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
- போடி தாலுகா போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் வினோபாஜி காலனி மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது மூவேந்தர் பள்ளி அருகில் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் லிங்கேஷ் (வயது 21) என்பவர் 1.100 கிராம் கஞ்சாைவ விற்பனைக்கு வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த வேட்டுவன்புதூர் மாதேஸ்வரன் கோவில் அருகே கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சந்திரன் (47) என்பதும், சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சந்திரனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்