என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garhwal"
- சாஸ்திரா நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
- சாஸ்திரா நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே சிக்கிக்கொண்டனர்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது. இங்கு மலையேற்றத்தை விரும்பும் டிரக்கர்கள் பயணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 டிரக்கர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சாஸ்திரா தல் நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் செல்வதற்கு வழி இல்லாததால் மீட்டுப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
சிக்கிய 22 பேரில் 18 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மற்ற மூவர் உள்ளூர் வழிகாட்டிகள் ஆவர். இந்நிலையில் காட்டு இலாகா அதிகாரிகளுடன் நேற்று முதல் மாநில மீட்புப்படையினர் நடத்திவந்த தேடுதலில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.