என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas cylinder price"

    • ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
    • இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

    ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டபோது குஜராத் முதல்வராக மோடி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    50 ரூபாய் விலை உயர்வு, ஏழைகளிடமிருந்து கேஸ் சிலிண்டரை தட்டிப் பறிக்கும் செயல் என மோடி கண்டிக்கும் வீடியோவை பகிர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.
    • தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

    நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? என்றும் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது Sadist BJP அரசுக்கு மிகவும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?

    "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!

    உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், #Petrol #Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?

    வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் #GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது.

    மக்களே…

    அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!

    ஒன்றிய #BJP அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது.
    • சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப வேறுப்படும்.

    எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாடுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றியமைத்துள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 1-ம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு உருளை புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 2 ஆயிரத்து 21 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சமையல் எரிவாயு உருளை இன்று முதல் ரூ. 84 குறைக்கப்பட்டு, ஆயிரத்து 937 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ஆயிரத்து 118 ரூபாய் 50 பைசா கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப வேறுப்படும். இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு உருளை வர்த்தக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகம் என்று இரண்டு விதங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை புதிய விலை

    சென்னை: 2 ஆயிரத்து 21 ரூபாய் 50 பைசா

    மும்பை: ஆயிரத்து 808 ரூபாய் 50 பைசா

    புது டெல்லி: ஆயிரத்து 856 ரூபாய் 50 பைசா

    கொல்கத்தா: ஆயிரத்து 960 ரூபாய் 50 பைசா

    ×