என் மலர்
நீங்கள் தேடியது "Gaurav Solanki"
ஜெர்மனியில் நடைபெற்று வரும் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை தொடரில் மதன் லால், கவுரவ் சொலாங்கி, ஹுசாமுதீன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #ChemistryCup #GauravSolanki #Hussamuddin #MadanLal
ஜெர்மனியின் ஹாலேயில் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் 52 கிலோ எடைப்பரிவில் கலந்து கொண்ட கவுரவ் சொலாங்கி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மதன் லால், ஜுசாமுதீன் மொகமது ஆகியோரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். #ChemistryCup #GauravSolanki #Hussamuddin #MadanLal
ஜெர்மனியில் நடைபெற்று வரும் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை தொடரில் அமித், கவுரவ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #Boxing
ஜெர்மனியின் ஹாலேயில் கெமிஸ்ட்ரி கோப்கை குத்துச் சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 49 கிலோ எடைப்பரிவில் கலந்து கொண்ட அமித் பங்கல் காலிறுதியில் ஜெர்மனியின் கிறிஸ்டோபர் கோமனை எதிர்கொண்டார். இதில் அமித் பங்கல் 5-0 என ஜெர்மனி வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
52 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் சோலங்கி ரஷியாவின் வடிர் குட்ரியாகோவை காலிறுதியில் எதிர்கொண்டார். இதில் கவுரவ் 5-0 என வெற்றி பெற்றார். அரையிறுதிக்கு முன்னேறியதால் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர்.

மணிஷ் கவுசிக் (60), நமன் தன்வார் (91) கிலோ ஆகியோர் தொடக்க சுற்றோடு வெளியேறினார்கள். விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.