என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gelatin sticks"
- கேரளாவில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தினமும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- சந்தேகப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தினமும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி இன்று அதிகாலை காசர்கோடு பகுதியில் உள்ள மூழியார் பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அங்கு ஏராளமான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பயங்கர வெடிமருந்துகள் இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக இதுபற்றி காசர்கோடு வெடிமருந்து தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிபொருள்களை கைப்பற்றினர்.
இதில் 2800 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 7 ஆயிரம் டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருள்கள் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த முஸ்தபா என்பரை போலீசார் கைதுசெய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, அவர் ஏற்கனவே குவாரி நடத்தி வந்ததாகவும், இந்த வெடிபொருள்களை குவாரிக்கு விற்பனை செய்ய வைத்திருந்தததாகவும் கூறினார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாராய வேட்டைக்கு சென்று அங்கு பயங்கர வெடிபொருள்கள் பறிமுதல் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தொண்டி அருகே கடற்கரையில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி இன்று கடலோரப் பாதுகாப்பு குழும பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தொண்டி மரைன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான போலீசார்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்
அப்போது கடற்கரையில் குழிதோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 239 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலில் வெடிகளை வெடிக்கச்செய்து மீன் பிடிப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்