search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "general polls"

    பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானுக்கு சவுதி மன்னர் சல்மான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #ImranKhan #Pakistan #Saudi #KingSalman
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் வருகின்ற 18-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி அரசர் சல்மான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல், இளவரசர் முகமது பின் சல்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதேபோல், ஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு தெரிவித்து வருகின்றனர். #ImranKhan #Pakistan #Saudi #KingSalman
    பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெரும் நிலையில் இருக்கும் இம்ரான் கான் சீனாவை முன்மாதிரியாக கொண்டு மக்கள் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். #PakistanElections2018 #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 4 மாகாண சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரையில், இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் உள்ளது. இதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி மூலம் இம்ரான் கான் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.



    இந்நிலையில், தனது வெற்றி குறித்து பேசிய இம்ரான் கான், வாக்களித்த பாகிஸ்தான் மக்களுக்கும், தனது 22 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு இந்த வெற்றியை தந்த இறைவனுக்கும்  நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர தாம் பார்த்துள்ளதாகவும், ஆனால் தற்போது பாகிஸ்தான் முற்றிலும் சீரழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் மக்கள் நல அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்கு உகந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சீனா தனது 70 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதை சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானை முன்னேற்றுவதில் சீனாவை முன்மாதிரியாக கொண்டு பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  #PakistanElections2018 #ImranKhan
    பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25, 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் பொதுத்தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.#ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussai
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, எதிர்க்கட்சி தலைவர் குர்ஷீத் ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொதுத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கி உள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை தேர்வு செய்துள்ளது. ஜூலை 25, 26  அல்லது 27 ஆகிய தேதிகளில் தேர்தலை நடத்தும்படி அறிவிக்குமாறு ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussain
    ×