என் மலர்
முகப்பு » german minister
நீங்கள் தேடியது "German Minister"
- இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பற்றி உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன.
- பெங்களூருவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் நாட்டின் மந்திரி விஸ்சிங் வந்திருந்தார்.
இந்தியாவில் சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகம் வரை அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ. மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் முறை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பற்றி உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் நாட்டின் மந்திரி விஸ்சிங் வந்திருந்தார். அவர் மாநாட்டின் இடையே பெங்களூரு நகர வீதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினார். அப்போது ஒரு கடையில் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிய அவர் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்திய புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஜெர்மன் தூதரகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
மேலும் இது தொடர்பான பதிவு யு.பி.ஐ. கட்டணங்களின் எளிமையை அனுபவிக்க முடிந்தது என பதிவிட்டுள்ளது.
×
X