search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "germany foot ball Team"

    இனவெறி தாக்குதல் நடைபெற்றதாக ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற மெசுட் ஒசிலை துருக்கி அதிபர் பாராட்டியுள்ளார். #MesutOzil
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 2014 சாம்பியனான ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது. ஜெர்மனி அணியில் 29 வயதான மெசுட் ஒசில் இடம்பிடித்திருந்தார். இவரது பூர்வீகம் துருக்கியாகும். உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்திருந்தார்.

    இந்த போட்டோவை வெளியிட்டு ஜெர்மனி அணிக்காக விசுவாசமாக விளையாடினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அணியின் முதன்மை அதிகாரிகளில் சிலர் எர்டோகனுடன் சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டிறிந்தனர்.

    இதனால் மனமுடைந்த மெசுட் ஒசில் ஜெர்மனி அணியில் அருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ‘‘நான் மெசுட் ஒசில் உடன் போனில் பேசினேன். அவருடைய அறிக்கை முழுவதும் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருந்தது. இது பாராட்டக்கூடிய நடத்தையாகும். நான் ஒசிலின் கண்களில் முத்தமிட்டேன்’’ என்றார்.



    மேலும், ‘‘ஜெர்மனி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஒரு இளைஞருக்கு எதிரான இதுபோன்ற இனவெறியை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    கால்பந்து உலகக்கோப்பையில் ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறியது குறித்து அப்ரிடி எமோசனலாக டுவிட் செய்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை ஜூரம் ரசிகர்களை மட்டும் ஆட்டிப்படைக்கவில்லை. மற்ற விளையாட்டுத்துறையில் சாதித்த மற்றும் சாதிக்கும் அணிகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகிப் அப்ரிடி. இவருக்கு பிடித்தமான அணி ஜெர்மனி. நடப்பு சாம்பியனான ஜெர்மனி நேற்று 0-2 எனத் தோல்வியை தழுவி தொடக்க சுற்றோடு வெளியேறியது. இது ஜெர்மனி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனி தோல்வி அப்ரிடியையும் அப்செட் ஆக்கியுள்ளது. 1938-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறி மோசமான சாதனைக்குள்ளாகியுள்ளது.


    ஜெர்மனி தோல்வி குறித்து ஒருவர் பதிவு செய்திருந்த டுவிட்டிற்கு, அப்ரிடி பதில் அளிக்கையில் ‘‘சாம்பியன்ஸ் எப்போதும் தோற்பதில்லை, புரோ. அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துள்ளார்கள். அடுத்த முறை வலுவான அணியாக திரும்பி வருவார்கள். ஆனால், ஜெர்மனி அணி அதன் ரசிகர்களை இழந்ததுதான் ஏமாற்றம் அளிக்கிறது. தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொரியாவிற்கு வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.



    உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு தொடக்க சுற்றோடு வெளியேறிய வரலாற்றில் இருந்து ஜெர்மனி தப்புமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்த சுற்றுக்கு அந்த அணி முன்னேறுமா? என்ற அச்சத்தில் ஜெர்மனி அணி உள்ளது.

    பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் அணிகள் கோப்பையை வென்ற அடுத்த வருடம் தொடக்க சுற்றோடு வெளியேறின. இந்த மோசமான சாதனையில் ஜெர்மனி சேர்ந்து விடக்கூடாது என ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால்தான் ரசிகர்களின் இந்த நினைப்பிற்குக் காரணம்.

    ஜெர்மனி இடம்பிடித்துள்ள குரூப் ‘எஃப்’ பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா அணிகள் இடம்பிடித்துள்ளன. ஜெர்மனி தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவிடம் 0-1 என வீழ்ந்தது. இதனால் அந்த அணிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் 2-வது ஆட்டத்தில் ஸ்வீடனை 2-1 என வீழ்த்தியது.

    இந்த பிரிவில் நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. மெக்சிகோ இரண்டு வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனி தலா ஒரு வெற்றி, தோல்வி மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ஸ்வீடன் தலா ஒரு வெற்றி, தோல்வி மூலம் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தென்கொரியா இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    இன்று நான்கு அணிகளும் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகின்றன. மெக்சிகோ ஸ்வீடனையும், ஜெர்மனி தென்கொரியாவையும் எதிர்கொள்கின்றன. ஜெர்மனி தென்கொரியாவை கட்டாயம் வீழ்த்தியாகவே வேண்டும். அப்போதுதான் நாக்அவுட் சுற்றை எதிர்பார்க்க முடியும். அதேவேளையில் ஸ்வீடன் மெக்சிகோவை வீழ்த்திவிட்டால் ஜெர்மனிக்கு கோல் அடிப்படையில்தான் வாய்ப்பு கிடைக்கும்.



    ஜெர்மனிக்கு இருக்கும் பிரகாசமாக வாய்ப்பு, மெக்சிகோ ஸ்வீடனை வீழ்த்த வேண்டும். அதேவேளையில் ஜெர்மனி தென்கொரியாவிற்கு எதிராக வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டும். இல்லையெனில் தொடக்க சுற்றோடு வெளியேற வெண்டியதுதான்.

    பிரான்ஸ் 1998-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2002-ல் தொடக்க சுற்றோடு வெளியேறினார். இத்தாலி 2006-ல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2010-ல் தொடக்க சுற்றோடு வெளியேறியது. ஸ்பெயின் 2010-ல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2014-ல் தொடக்க சுற்றோடு வெளியேறியது.
    நடப்பு சாம்பியன் அணியான ஜெர்மனிக்கு சவுதி அரோபியாவிற்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் கிடைத்த வெற்றி நம்பிக்கை ஊட்டியுள்ளது. #Fifa2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த வாரம் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 32 அணிகளும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை. கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. இதற்கு முன் ஐந்து போட்டிகளில் ஜெர்மனியால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று, புதுநம்பிக்கையுடன் ரஷியா செல்ல வேண்டும் என்று அந்த அணி விரும்பியது.



    ஜெர்மனி அணி விரும்பியதுபோல் சவுதி அரேபியாவை 2-1 என வீழ்த்தியது. இந்த வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கையளித்துள்ளது. 8-வது நிமிடத்தில் டிமோ வார்னர் முதல் கோலை பதிவு செய்தார். 43-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ஜெர்மனிக்கு ஓசி கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் (84-வது நிமிடத்தில்) சவுதி அரேபியாவின் தைசிர் அல்-ஜாசிம் கோல் அடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் ஈரான், குரோசியா, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். போலந்து - சிலி இடையிலான ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.
    ×