என் மலர்
நீங்கள் தேடியது "Ghazni"
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய வான் தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. #Afghanistan #Taliban #AirStrike
கஜினி:
ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் காராபாக் மாவட்டத்தின் ஜமால் கில் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசவேலை நடத்த சதி செய்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு படைகள் அதிரடியாக வான்தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் தளபதி ரபியுல்லாவும் ஒருவர் என தகவல்கள் கூறுகின்றன. தலீபான்கள் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப் படுகிறது.
இந்த தாக்குதல் பற்றி மாகாண அரசு செய்தி தொடர்பாளர் ஆரிப் நூரி கூறும்போது, “வான்தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி ரபியுல்லா மிகவும் கொடூரமானவர். அவர் கொல்லப்பட்டு விட்டதால், அந்தப் பகுதியில் இனி பாதுகாப்பு நிலை மேம்படும்” என குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் பற்றி தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. #Afghanistan #Taliban #AirStrike