search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Giggles Private Limited"

    • கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது.
    • ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நடு இரவில் வந்த மர்மநபர்கள் அவரையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனமான கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா ரெட்டி ஜூலை 10 தேதி மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.

    ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நடு இரவில் வந்த மர்மநபர்கள் அவரையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர். பின்னர் ரவிச்சந்திராவை அந்த கும்பல் கடத்தி சென்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 83 மடிக்கணினிகளையும் அந்த கும்பல் திருடி சென்றுள்ளது.

    இது தொடர்பாக ரவிசந்திராவின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, ரவிச்சந்திராவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், 4 நாட்களுக்கு பின்பு போலீசார் ரவிச்சந்திராவை ஸ்ரீசைலம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் கண்டுபிடித்து மீட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில், ரவிச்சந்திரா சி.இ.ஓ.வாக உள்ள கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 5 ஊழியர்களும் அடங்கும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 84 மடிக்கணினிகள், 6 கார்கள், 5 தொலைப்பேசிகள் மற்றும் 3 பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    நிதி சிக்கல் காரணமாக அவரது கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த சில ஊழியர்கள் தான் ரவிச்சந்திராவை திட்டம் போட்டு கடத்தியுள்ளனர் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×