என் மலர்
நீங்கள் தேடியது "Girl children"
- நாடு முழுவதும் பாலின பேதங்கள் இன்றி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்
- பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்றார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் சில தசாப்தங்களுக்கு முன் வரை குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என கேட்பதும், ஆண் குழந்தை என்றால் உயர்வாக கருதுவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது.
இன்றைய காலகட்டத்தில் அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது.
இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
மூட நம்பிக்கைகளால் பெண் குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலைமை தற்காலத்தில் அறவே மாறி, பாலின பேதம் இல்லாமல் கிராமங்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.
2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.

பாலின சமத்துவம், கல்வி, உடலாரோக்கியம், பணி மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களில் சமநிலையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் "பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, "பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள்.பெண் குழந்தைகள் கல்வி கற்று, வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு செய்து வருகிறது" என குறிப்பிட்டார்.
2015ல் பிரதமர் நரேந்திர மோடி இதே தினத்தன்று, "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்; பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்" ("பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ") என முன்னெடுத்த பிரசார திட்டங்கள் குறித்தும் இன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.
அதிலும் மகாராஷ்டிராதான் குழந்தைகள் தத்தெடுப்பில் முன்னணியில் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு 642 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 35 பெண் குழந்தைகளாகும். கர்நாடகா மாநிலத்தில் தத்து கொடுக்கப்பட்ட 286 குழந்தைகளில் 167 பெண் குழந்தைகள். 2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் 3276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 1858 பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் 1418. 2016-2017-ம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட 3210 குழந்தைகளில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 1915.
இதுகுறித்து குழந்தைகள் தத்தெடுப்பு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தீபக்குமார் கூறுகையில், ‘‘தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். பெண்-ஆண் குழந்தைகள் தேர்ந்தெடுப்பு சதவீதம் 55:45 என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் அதிகமாக இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் குழந்தையை அதிகமாக தத்தெடுக்க விரும்புகிறார்கள். ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதும், கையாளுவதும் எளிதாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுவே பெண் குழந்தைகள் அதிகம் தத்தெடுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது’’ என்கிறார்.