என் மலர்
நீங்கள் தேடியது "Glamorous photo"
- அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
- யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை, மாடல், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகங்களை கொண்டவர் யாஷிகா ஆனந்த். தனது 14 வயதிலேயே மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மைனர் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி, கடமையை செய், பகீரா என பல படங்களில் நடித்தார். எனினும் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த பெரிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.
அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவர் கிளாமர் போட்டோக்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் யாஷிகாவின் படு கிளாமரான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
- பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருகிறார்.
- ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை தமன்னா வித்தியாசமான ஆடை அணிந்து வந்தார்.
பிரபல நடிகை தமன்னா, தற்பொழுது அதிக அளவில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை அவர் காதலித்து வருகிறார்.

ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள இந்த காதல் ஜோடி, அண்மையில் தான், தங்களது இருதலை காதல் குறித்து அறிவித்தனர். அதன்பிறகு அவ்வப்பொழுது இந்த ஜோடி வெளிநாட்டிற்கு டேட்டிங் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தமன்னாவிற்கும், விஜய் வர்மாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தொடர்ச்சியாக நடிகை தமன்னா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் சுந்தர் சி-யின் அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் வித்தியாசமான ஆடை அணிந்து மணமகளைப் போல் காட்சி அளித்தார் நடிகை தமன்னா.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ராகாவா லாரன்ஸ் முனி படத்தை இயக்கிய போது தனக்கு ஜோடியாக வேதிகாவை நடிக்க வைத்தார்.
- அதை தொடர்ந்து காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ராப் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மதராஸி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வேதிகா. ராகாவா லாரன்ஸ் முனி படத்தை இயக்கிய போது தனக்கு ஜோடியாக வேதிகாவை நடிக்க வைத்தார்.
அதை தொடர்ந்து காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ராப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் போனார். தெலுங்கும், கன்னடமும் இவருக்கு கை கொடுக்க அந்த மொழியில் பல படங்களிலும் நடித்தார்.

இப்போது கூட ஒரு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். மேலும், கஜானா என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலிங் துறையில் சில வருடங்கள் இருந்தார்.

சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற வேதிகா பிகினி உடையில் கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.