என் மலர்
நீங்கள் தேடியது "Goa hotel"
- தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர் கே.பி.சவுத்ரி.
- அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பை:
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி என்கிற கே.பி.சவுத்ரி(44 வயது). இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர்.
இவர், கோவா மாநிலத்தின் வட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அங்கே இருந்தவர்கள் சந்தேகம் கொண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்தால் தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவா ஓட்டலில் சூதாடிய காட்சிகளை பேஸ்-புக்கில் பதிவிட்ட புதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சந்திரசேகரன். இவர், கடந்த 18-ந் தேதி விமானம் மூலம் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார். மேலும், கோவாவில் பிரபலமான (கேசியானா) சூதாட்ட விடுதிக்கும் சென்றுள்ளார்.

ஒரு போலீஸ் அதிகாரி சுற்றுலா சென்று சூதாடி கொட்டமடித்திருப்பது புதுவை காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மீது புதுவை காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
சமூக வலைத்தளத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மீறி செயல்பட்டால் ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகியுள்ளது. #tamilnews

அவர், தான் சென்ற பகுதிகளை படங்களுடன் பேஸ்-புக்கில் பதிவிட்டார். சூதாட்ட விடுதிக்கு செல்வது, வரவேற்பு பெண்களுடன் நிற்பது, சூதாடுவது, வெற்றி பெற்ற அறிவிப்பு திரையில் வருவது போன்றவகளை தனது பேஸ்-புக்கில் பதிவிட்டுள்ளார்.