search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gomatha"

    • பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும்.
    • பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.

    இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள்.

    மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றை கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

    பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முகூர்த்த சாஸ்திரம்' சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ' தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

    • 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது.
    • பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும்.

    இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, க்ரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் நகரிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி, கோமாதா கொண்டிருக்கும் விஷேச சக்திகள் பின்வருமாறு.

    33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.

    எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும். மேலும் பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.


    ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்ப்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும். ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும், நீங்கள் எங்காவது ஒரு நல்ல காரியமாக செல்கிற போது பசுவினுடைய சப்தத்தை கேட்டால் அது அக்காரியம் வெற்றி என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.

    மேலும் ஏதேனும் கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பின் புனித பசுவின் வால் பகுதியில் அமைந்துள்ள ஜடையை கொண்டு ஏழு முறை மந்திரிப்பதை போன்ற செயலை செய்கிற போது திருஷ்டிகளை களைய முடியும். பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும். பசுவினுடைய நெய்யினால் தீபம் ஏற்றப்பட்டால் அது பல நல்ல அதிருவ்களை ஈர்ப்பதாக அமையும். வீட்டின் பூஜையறையில் கிருஷ்ணர் பசுவினுடன் இருப்பதை திருவுருவ படத்தை வைத்து வழிபட்டால் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. நலம், வளம், செல்வம் என அனைத்து செளபாக்கியங்களையும் பசுவினை வழிபடுவது நம் நல்வாழ்விற்கு பெரும் உதவியாக அமையும். மகிழ்வான வாழ்விற்கு கோமாதாவின் ஆசிகளை பெறுவது அவசியமாகும்.

    • எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
    • ‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும்.

    'கோவிந்தா' என்று சொன்னால் 'போனது வராது' என்று பொருள்படும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், 'பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள் வரும்.

    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.

    பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

    • அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
    • நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

    * பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா? என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

    * 90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.

    * விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..

    * சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சரியம் அடைந்தார்கள்.

    * ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.

    * அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்காலம் தொட்டு பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கிறோம்.

    அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

    பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்

    * பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,

    * முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

    * கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

    * நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

    * பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அது மட்டுமல்ல அது தரக்கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது. எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது.

    பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்து தயாரிக்கப்படும் “பஞ்சகவ்யம்” சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன. பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம்.

    பசுவின் உடல் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்தது. கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
    பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    * கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவேதான் அவரை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கிறோம்.

    * கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.

    * ஒரு பசு தன்னுடைய முதன் கன்றை பிரசவிக்கும் போது அதனை ‘தேனு’ என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை ‘கோ’ என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைத் தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

    * பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. அதனால் தான் பசு பின் பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.

    * காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

    * பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

    * பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால். வாழைப்பழம் கொடுக்கலாம்.

    * உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.

    * பசு தானம் வாங்குபவர்கள், லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் கடன் சுமை குறையும்.
    ×