என் மலர்
நீங்கள் தேடியது "gooseberry laddu"
- வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன. நெல்லிக்காயை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி நல்ல அடர்த்தியான கூந்தலையும், முகப்பொலிவையும் பெறலாம்
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய்- 10
நாட்டு சக்கரை அல்லது வெல்லம்- 250
ஏலக்காய் பொடி- ஒரு ஸ்பூன்
நட்ஸ் வகைகள்- தேவையான அளவு
நெய்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை வைத்து ஐந்து நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நெல்லிக்காய்களை துருவி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நெல்லிக்காய் மற்றும் சர்க்கரை ஒன்று சேர்ந்து திக்கான பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
இதில் ஏலக்காய் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து கலக்க வேண்டும். கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
கைகளில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டலாம். அவ்ளோதான் சுவையான நெல்லிக்காய் லட்டு தயார்.