என் மலர்
நீங்கள் தேடியது "goutham vasudev menon"
- தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.
- இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.
இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார். தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
தற்பொழுது படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த லியோ படத்தில் விஜய் மற்றும் கவுதம் மேனன் ஒன்றாக நடித்து இருந்தனர்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது தளபதி 69 படத்தில் நடித்துள்ளார். கவுதம் மேனன் அண்மையில் மழை பிடிக்காத மனிதன் திரைப்பத்தில் நடித்து இருந்தார் மேலும் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தில் நடுத்த நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், கவுதம் வாசுதேவ் மேனனிடம் தனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க டிப்ஸ் தருமாறு மற்றும் பின் மேடையிலயே ஒரு டெமோ காட்டும்படி கேட்டுக் கொண்டார்.
கவுதம் வாசுதேவ் மேனனும் எந்த வித தயக்கமும் இன்றி அவரது படத்தின் பிரபல வசனமான விண்ணை தாண்டி வருவாய் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசனங்களை பேச சொன்னார். விஜய் ஆண்டனியும் அங்கு இருந்த நாயகிகளிடம் அந்த வசனத்தை பேசி ஒத்திகைப் பார்த்தார். இந்த சம்பவம் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. இந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'
- ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.
இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று மதியம் 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.
படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்".
நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், "'13' படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.
'13' படத்திற்கு சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், 'கதிர்' படப்புகழ் பவ்யா த்ரிக்கா.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.