என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "government hospital"
- வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்து குப்பைகளை அகற்றினர்.
- குழந்தைகள் தீயில் எரிந்து சாகும்போது பாஜக அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீயில் உடல் கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் இடிந்துபோயுள்ள இந்த சோகமான சூழலுக்கு மத்தியிலும், மருத்துவமனையைப் பார்வையிட வந்த உத்தரப் பிரதேச ஆளும் பாஜக துணை முதல்வர் பாரேஷ் பாதாக் வருகைக்காக மருத்துவமனையில் விஐபி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. துணை முதல்வர் வருகையை முன்னிட்டு 10 குழந்தைகள் எரிந்து கருகிய அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ள பாதைகளையும், மருத்துவமனைக்கு உள்ளேயும் ஊழியர்கள் அவசர அவசரமாக சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சடலங்களின் வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்தும் மேற்படி வேலை பார்த்துள்ளனர். இந்த விஐபி வரவேற்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக அரசின் துளியும் உணர்ச்சியற்ற செயலை பாருங்கள். ஒரு புறம் குழந்தைகள் உடல் கருகி மரணித்துள்ளனர் , அவர்களின் குடும்பங்கள் அழுத்து ஓலமிட்டுகொண்டின்றன. மறு புறம் துணை முதல்வரை வரவேற்கப் பாதைகளில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டு வருகிறது.
துணை முதல்வரின் வருகைக்காக மருத்துவமனை வளாகம் முழுவதிலும் அவசர அவசராமாக குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் நடத்துள்ளதென குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுதான் இந்த பாஜக அரசின் அலட்சியப் போக்கின் உச்சம். குழந்தைகள் தீயில் எரிந்து செத்துக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது. என்ன ஒரு வெட்கக்கேடான செயல் என்று சாட்டியுள்ளது.
BJP सरकार की संवेदनहीनता देखिए।एक ओर बच्चे जलकर मर गए, उनके परिवार रो रहे थे, बिलख रहे थे। दूसरी तरफ, डिप्टी CM के स्वागत के लिए सड़क पर चूने का छिड़काव हो रहा था।परिजनों का यहां तक कहना है कि पूरे कम्पाउंड में गंदगी फ़ैली हुई थी, जो डिप्टी CM के आने से पहले ही साफ की गई।… pic.twitter.com/M1sk8SAa0E
— Congress (@INCIndia) November 16, 2024
இதற்கிடையே விஐபி வரவேற்பு சர்ச்சையானது அடுத்து தனது வருகைக்கு சிறப்பு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் இந்த விபத்து தொடர்பாக உ.பி. அரசின் மெத்தனப் போக்கை காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோரும் விமரித்துள்ளனர்.
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
தனது தாய்க்கு, முறையாக சிகிச்சை அளிக்காதது குறித்து மருத்துவரிடம் கேட்டேன். ஜனவரி மாதம் முதல் தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சைக்கு சென்றேன்.
என் தாயக்கு கீமோ சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிக்குக்கு சென்றபோது தாயின் உடல் நிலை தேறியது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒவ்வொறு முறையும் 20 ஆயிரம் வரை செலவானது. மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு மருத்துவர் பாலாஜியிடம் கேட்டேன்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மருத்துவர் என்னை திட்டி கீழே தள்ளினார். ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- டாக்டர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
- அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியும் டாக்டர்கள் கலைந்து செல்ல மறுப்பு.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கும் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கொல்கத்தா ஆர்.ஜி. கெர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் டாக்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சையை தவிர்த்த மற்ற சிகிக்சைகள் அளிக்க மறுத்துவிட்டனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் போரட்டம் நடத்திய டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் டாக்டர்கள் கலைந்த செல்ல மறுத்துவிட்டர்.
பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கத்தியால் குதித்த விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார்.
- மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்
தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து உதயநிதி கேட்டறிந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மருத்துவர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறது. அவரது தலைப் பகுதியில் 4 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. இது தவிர்க்க முடியாத சம்பவம். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம். மருத்துவர் குடுப்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளோம்.
- சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- மருத்துவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியின் குடும்ப உறுப்பினர், பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மருத்துவர் கிழே சுருண்டு விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று மருத்துவர் மீது விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
புறநோயாளி என்ற சீட்டை பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்த விக்னேஷ் மருத்துவரை சரமாறியாக குத்தியுள்ளார். அவசர பிரிவில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்.
- எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென ஆய்வு.
- உடனடியாக படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
மகப்பேறு நல மருத்துவ பிரிவு 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உள்ளது. இதில் முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, 3-வது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி 4-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, 5-வது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை உள்ளன.
இந்த நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் பல பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு உடனடியாக அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
அப்போது எழிலரசன் எம்.எல்.ஏ. கூறும்போது, இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்து புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
- இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த டாக்டர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.
மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரி உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை டாக்டரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.
- குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது.
- ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அதனால், நுரையீரல், இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை மூலம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் உறக்கத்தின்போது, குறட்டை ஏற்படும் பிரச்சனையை கண்டறிய நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம் மூலம் உறக்கத்தின்போது ஏற்படும் குறட்டை மற்றும் மற்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை சிறப்பாக அளிக்க முடியும்.
மேலும், உறக்கத்தின்போது, ஏற்படும், மூச்சடைப்பு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், நோயின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம். குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆய்வகத்தில் இலவசமாக சோதனை செய்து, காது, மூக்கு, தொண்டை, மருத்துவரை அணுகலாம்.
- குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக கொண்டுவந்தபோ பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் நேற்று கடத்திச் சென்றார்.
குழந்தையை கடத்திச் சென்ற பெண், சேலம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என தெரியவந்தது.
இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளன. குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பல வருடங்களாக குழந்தை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடி சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக வினோதினி கொண்டு வந்தபோது, காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- மருத்துவமனையை தரமான முறையில் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் பிரசவ வார்டு மேம்படுத்தும் பணி ரூ.10 கோடியில் நடந்து வருகிறது.
இந்த நிதியில் 3 மாடி புதிய கட்டிடம் கட்டுமான பணி கடந்த 2022 ஜனவரியில் தொடங்கியது. ஓராண்டில் பணிகள் முடிக்க வேண்டிய நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவு பெற வில்லை.
இந்நிலையில் நேற்று போர்டிகோவின் மேல் பகுதியில் நின்று தொழிலாளர்கள் சிமெண்டு பூச்சு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருபுறங்களிலும் இருந்த பில்லர்கள் திடீரென இடிந்து விழுந்ததில் மதுரை ஊமச்சிக்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் (வயது40) என்பவர் உயிரிழந்தார்.
மேலும் பணியில் இருந்த மதுரையை சேர்ந்த செல்வம் (32), சதீஷ்குமார் (42) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையை தரமான முறையில் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் தரமற்ற முறையில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்ட காண்டிராக்டர் பாண்டியராஜ், என்ஜினீயர்கள் வெங்கடாசலம், மணிவண்ணன், நவீன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய 5 பேர் மீது கம்பம் தெற்கு போலீசார் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வந்த மகப்பேறு பிரிவில் ஒரு பகுதி விபத்துக்குள்ளானது.
கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
- 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
மருத்துவர் தின நிகழ்ச்சி
தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நேற்று [ஜூன் 1] தமிழக மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக நடந்த மருத்துவர்கள் தின நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த 2020 முதல் பிறந்த 1000 குழந்தைகளில் 13 குழந்தைகள் என்ற அளவில் இருந்த இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்களில் 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. பிறந்ததில் இருந்து 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த IMR இறப்பு விகிதத்தில் கணக்கிடப்படுவர்.
தரவுகள்
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவ பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்து வரும் தமிழக மருத்துவ மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி குழந்தை எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது குறைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 2020 தரவுகளின்படி 1000 குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.
மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கை
மேலும் தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 52 என்று இருந்த மகப்பேறு மரணங்கள் தற்போது 1 லட்சத்துக்கு 48 ஆக குறைத்துள்ளது. இதுவே இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 97 மகப்பேறு மரணங்கள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை உள்ளது.
அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள்
ஆனால் சமீப காலங்களில் உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்த வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 70 சதவீதம் அரசு மகப்பேறு மருத்துவமனைகளிலேயே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்