என் மலர்
நீங்கள் தேடியது "government hostel"
- மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
- ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் அரசு விடுதியில் தங்கி படித்து வரும் 10 வகுப்பு மாணவி தொடர்ந்து 15 முறை ஏற்பட்ட எலிக் கடி காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்மம், தானவாய்குடத்தில் பி.சி. நல விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவியை, இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்து வரும் நிலையில், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விடுதிகளில் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பிஆர்எஸ் கட்சி விமர்சித்துள்ளது.