என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government issues"

    • சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
    • காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அரசாணை வெளியீடு.

    தமிழகத்தில் 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

    ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில் இன்று அரசாணை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவர்னர்களின் மாத ஊதியத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3½ லட்சமாக உயர்த்திய மத்திய அரசு, அவர்களுக்கான படிகளையும் உயர்த்தி தற்போது அறிவித்து உள்ளது. #Governor #Allowance
    புதுடெல்லி:

    மாநில கவர்னர்களின் மாத ஊதியம் மற்றும் படிகளை அந்தந்த மாநில அரசுகளே வழங்கி வருகின்றன. கவர்னர்களின் மாத ஊதியத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3½ லட்சமாக உயர்த்திய மத்திய அரசு, அவர்களுக்கான படிகளையும் உயர்த்தி தற்போது அறிவித்து உள்ளது.

    அதன்படி கவர்னர்களுக்கான சுற்றுப்பயணம், விருந்தினர் உபசரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவின படிகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காள கவர்னர் ரூ.1.81 கோடி பெறுகிறார். அடுத்ததாக தமிழக கவர்னருக்கு ரூ.1.66 கோடியும், பீகார் கவர்னருக்கு ரூ.1.62 கோடியும், மராட்டிய கவர்னருக்கு ரூ.1.14 கோடியும் வழங்கப்படும்.இதைப்போல கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கான செலவினம், பராமரிப்பு செலவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கு ரூ.80 லட்சமும், கொல்கத்தா, டார்ஜிலிங்கில் உள்ள கவர்னர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.72.06 லட்சமும் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை அலங்கார மாற்றுக்கு ரூ.7.50 லட்சமும், சென்னை மற்றும் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.6.5 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.  #Governor #Allowance #tamilnews 
    ×