search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gowthameshwarar Temple"

    • இதனால் கவுதமரின் பசுக்கொலை பாவம் விலகியது.
    • கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார்.

    கவுதமர் என்ற பிரபலமான முனிவருக்கு சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி உண்டு.

    இவர் தன் மனைவியுடன் தலயாத்திரை செய்து கொண்டே சிதம்பரம் வந்தார்.

    பிறகு சீர்காழிக்கு வந்தார்.

    அப்போது சீர்காழியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.

    இந்த பஞ்சத்தை தன்னால் இயன்றவரை தீர்த்துக் கொண்டிருக்கும் பொழுது கவுதமரின் புகழ் பெருமை அன்னதானப் புண்ணியம் இவற்றைக் கண்டு பொறாமைப்பட்ட அவருடைய சீடர்கள் சிலர்,

    வேண்டுமென்றே ஒரு பசுவை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

    ஏற்கனவே கடுமையான பஞ்சத்தால் இளைத்திருந்த அந்த பசு, கவுதம முனிவரின் கை பட்டவுடன் இறந்து விட்டது.

    தான் ஒரு பசுவைக் கொலை செய்து விட்டோமே என்ன செய்வது என்று திகைத்த கவுதமர் உடனே தன் மனைவியோடு சீர்காழியை விட்டுக் கிளம்பி மயிலாடுதுறைக்கு வந்தார்.

    மயிலாடுதுறையில் தங்கியிருந்த துர்வாச முனிவரிடம் சீர்காழியில் தான் செய்த பசுவதையைச் சொன்ன போது,

    அதற்கு துர்வாச முனிவர் பசுவதையை நீ செய்யவில்லை.

    உன் பெருமையைக் கெடுக்க பாதகர் செய்த சூழ்ச்சி.

    இனியும் இப்படிப்பட்ட பசுக்கொலை ஏற்படாமலிருக்க கும்பகோணம் சென்று காவிரியில் நீராடி

    மகாமகக் குளத்திற்கு தென்மேற்கு முனையில் எழுந்தருளியிருக்கும் உபளிதேச்சுப் பெருமானை தரிசித்தால்

    உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவம் நீங்கும் என்று வழிகாட்டினார்.

    துர்வாச முனிவரின் யோசனையை ஏற்று, கவுதமர் காவிரியில் நீராடி கும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகே

    குடிகொண்டிருக்கும் சிவ பெருமானை வழிபட வந்தார்.

    அங்கு தனக்கென்று ஒரு தீர்த்தம் அமைத்தார்.

    அதில் தினமும் நீராடி உபளி தேச்சுப் பெருமானை வழிபட்டு வரும் பொழுது சிவபெருமான் கவுதமருக்குக் காட்சியளித்தார்.

    இதனால் கவுதமரின் பசுக்கொலை பாவம் விலகியது.

    கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார்.

    அவர் அமைத்த தீர்த்தம் கவுதம தீர்த்தமாக மாறிற்று. கவுதமருக்கு அருள் பாலித்ததால் உபளிதேச்சுப் பெருமான் பின்னர் கவுதமமேசர் என்று பெயர் மாற்றினார்.

    அம்பாள் பெயர் சவுந்தரநாயகி. இன்னொரு காரணப் பெயரும் உண்டு.

    அமுதக் குடத்திலிருந்து கயிறு (பூணூல்) விழுந்த இடம் இந்த ஸ்தலம்.

    இங்கு தோன்றிய சிவலிங்கத்திற்கு கோவில் கட்டப்பட்டு முதலில் யக்நோபஷதேஸ்வரர் என்று பெயர் வைத்தார்கள்.

    பின்னர் உபளிதேச்சுப் பெருமானாக மாறி இன்றைக்கு கவுதமேஸ்வரர் கோவிலாக விளங்கி வருகிறது.

    ×