என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gram Sabha meetings"
- 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
- மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.
திருப்பூர்:
சுதந்திர தினத்தை ஒட்டி, நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகளின் 10 அம்சக் கோரிக்கைகள் தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் 18 மாவட்டங்களில் விவசாயிகளின் அடிப்படையான கோரிக்கை மற்றும் அந்தந்த பகுதி சாா்ந்த கோரிக்கை என 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 22 மாவட்டங்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.
இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் 10 அம்சக் கோரிக்கைகளைத் தீா்மானமாக நிறைவேற்ற அந்தந்த பகுதி விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
- பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின நாளான 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவ ரால் நடத்தப்பட உள்ளது.
130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வது பற்றி விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டடம் கட்ட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிறுப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இதரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.
- அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சியில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலைத் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டம், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார், சாரா வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளன.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- காலை 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
- கிராமசபை கூட்டத்தில் 12 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், மே தினத்தன்று, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. தொழிலாளர் தினமான வரும் மே 1ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 265 கிராம ஊராட்சிகளில், காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்த விவாதம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளின் முன்னேற்றம்.
அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது; அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு; எங்கள் கிராமம், எழில் மிகு கிராமம், ஜல் ஜீவன் என, கிராமசபை கூட்டத்தில், 12 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
கிராமசபை கூட்ட நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில், 'நம்ம கிராமசபை' என்கிற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டு, கடந்த அக்., முதல் செயல்பாட்டில் உள்ளது. மக்களின் வருகைப்பதிவு உள்பட கிராமசபை கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும், இந்த செயலியில் பதிவு செய்யவேண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது
- உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
- இத்தினத்தில் தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:
உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உலக தண்ணீர் தினமான இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், குறைவெண் வரம்பின் படி கூட்டத்திற்கு உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கிராம சபை கூட்டத்தினை அந்தந்த ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையைப் பின்பற்றி மார்ச் 22-ம் தேதியன்று காலை 11.00 மணியளவில் நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை மதச் சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின கிராம சபை கூட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
- மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில், சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- இதில் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே, பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் நேற்று காந்திஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு அறிவித்துள்ள பல்வேறு தீர்மானங்கள் மற்றும் குடிதண்ணீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் வட்டாரம் பாளையங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போடிகாமன்வாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் நாகலட்சுமி சசிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடி தண்ணீர், சுகாதாரம் உள்பட முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு, தலைவர் ராணி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் துணைத் தலைவர் தனபாக்கியம், ஊராட்சி செயலர் சேசு மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மலைச்சாமி, ஊராட்சி செயலர் (பொறுப்பு) நடராஜ், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.பாறைப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் சுருளியம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நடராஜன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வீரக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் யூசின்ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்கம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ஜான் கென்னடி, ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பித்தளைப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தலைவர் மயில்சாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி செயலர் கண்ணையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், துணைத் தலைவர் கவிதா, ஊராட்சி செயலர் அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ள முக்கிய தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சித்தரேவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மலர்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜோதி மயில்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி செயலர் சிவராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேவரப்பன்பட்டி ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மாரிமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரிதிவிராஜன், ஊராட்சி செயலர் மணவாளன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்