என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "guatemala"
- எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளிவருவதுபோன்று....
- இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்
மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது.
இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் தேதி ஆன்டிகுவா நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது.
எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல் துண்டுகள் டெஃப்ரா எனப்படும். இந்த எரிமலை கடின தீக்குழம்பு மற்றும் டெஃப்ரா ஆகியவற்றின் பல அடுக்குகளால் உருவாகிறது. இதனால் இது எரிமலை வகைகளில் ஸ்ட்ராட்டோ அல்லது கலவை எரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிமலையின் உயரம் 12,340 அடியாகும். வீடியோவில் இந்த மின்னல் தாக்குதல், அதன் மேலே உள்ள முழு வானத்தையே ஒளிரச் செய்வது போல் தோன்றுகிறது.
¡Espectacular!Video captado en la ciudad Colonial de La Antigua Guatemala. pic.twitter.com/hpnXm1ZJQH
— Vinicio Gutierrez (@viniciogutierr3) July 11, 2023
மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது. நகராட்சி அலுவலகம் அருகே இந்த விபத்து நடந்தது. லாரியில் சிக்கிய பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 30 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவத்தில் 17 பேர் படுகாயமுற்றனர். உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவுதமாலாவின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோர சம்பவத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் செய்துக் கொண்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இவ்விபத்திற்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கவுதமாலா அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #GuatemalaAccident
கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மீட்பு பணியின்போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. #GuatemalaVolcano
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலைக் குழம்பு சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழப்பு 69 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.
எரிமலை வெடிப்பால் சிதறிய சாம்பல் துகள்கள் இறந்தவர்களின் மீது படிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், நெருப்பு குழம்பினால் உயிரிழந்த பலருக்கு ரேகை இல்லாமல் போனதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தேசிய தடயவியல் நிறுவன இயக்குனர் ஃபனூயெல் கார்சியா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. #valcanoeruption
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதையடுத்து கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பினால் இன்று காலை வரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு ஒருங்கிணைப்பாளர் கான்ரெட் தெரிவித்துள்ளார்.
ஃபுயீகோ எரிமலையைச் சுற்றி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பலர் காணாமல் போனதாகவும், அவர்கள் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை என்றும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
முன்னதாக தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவரும், அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலசும் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் ஜிம்மி மொராலஸ், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் ‘ரெட் அலார்ட்’ அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவர், நேற்று இரவு வெளிச்சம் குறைவாக இருந்ததால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்று காலை மீட்பு பணி மீண்டும் துவங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. #valcanoeruption
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்