என் மலர்
நீங்கள் தேடியது "gun fight"
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் ராணுவ வாகனங்களில் சென்றபோது தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதையடுத்து புல்வாமா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் புல்வாமா மாவட்டம் டெலி போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
இதையடுத்து புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள பன்ஸ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்ட னர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நீடித்தது. அப்பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் புல்வாமாவில் 2-வது முறையாக பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.