என் மலர்
நீங்கள் தேடியது "gurudaspur"
பா.ஜ.க.வில் இன்று இணைந்த இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என அக்கட்சி அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol
புதுடெல்லி:
இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க.வில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, சன்னி தியோல் பா.ஜ.க. தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இன்று இணைந்தார்.

இந்நிலையில், இன்று இரவு பாஜக சார்பில் பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
இதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், ஹொசைர்பூர் தொகுதியில் சாம் பிரகாஷும், சண்டிகரில் கிரண் கெர் ஆகியோரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol