search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hacks"

    அமெரிக்காவில் நடந்த ஹேக்கர்கள் போட்டியில் தேர்தல் சிஸ்டத்தின் மாதிரியை 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன் ஹேக் செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளது, அந்நாட்டு தேர்தல் சிஸ்டத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் சமீபத்தில் டெப்கான் என்ற கம்யூட்டர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. அமெரிக்கத் தேர்தல் கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சங்களைச் சோதிக்கும் நோக்கத்தோடு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹேக்கிங் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. 

    6 முதல் 17 வயதுடைய 35 சிறுவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் நடத்தப்படும் தேர்தலின் மாதிரி சிஸ்டத்தை ஹேக் செய்வதே இந்த போட்டியின் இலக்கு.

    போட்டி தொடங்கிய 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன், சிஸ்டத்தை ஹேக் செய்து பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, வேட்பாளரின் பெயர் ஆகியவற்றை மாற்றிக்காட்டி முதலிடம் பிடித்தான். தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடிக்கும் போது இதுபோல ஹேக் செய்து முடிவுகளை மாற்ற வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இது அந்நாட்டு தேர்தல் அமைப்பினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தேர்தல் அதிகாரிகள், இது போன்ற மாநாடுகள் வரவேற்கத்தக்கது. இந்த முறையில் உள்ள குறைகள் அந்தந்த மாநிலங்களிடம் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர். 
    ×